4-வது வாரமாக உயர்ந்து முடிந்தது பங்கு சந்தை: வரலாற்று சாதனை படைத்தது நிப்டி

By செய்திப்பிரிவு

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்கு சந்தையின் சென் செக்ஸ் குறியீடு முந்தைய நாளை விட 284.32 புள்ளிகள் (0.75%) உயர்ந்து 37947.88 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தை யின் நிப்டி குறியீடு நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் 85.70 புள்ளிகள் (0.75%) உயர்ந்து முன் னெப்போதும் இல்லாதவகையில் 11470.75 புள்ளிகளில் முடிவுற்றது. மும்பை பங்கு சந்தையின் சென் செக்ஸ் குறியீடு நேற்றைய வர்த்த கத்தின் இடையே அதிகபட்சமாக 38022.32 புள்ளிகளைத் தொட்டது. தேசிய பங்கு சந்தையின் நிப்டி குறியீடு அதிகபட்சமாக 11484.90 புள்ளிகளைத் தொட்டது. தொடர்ந்து 4-வது வாரமாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் உயர்வு கண்டுள்ளன.

எஃப்எம்சிஜி, உலோகம், வங்கி மற்றும் உடல்நலம் சார்ந்த துறை களின் பங்குகள் அதிகமாக வாங்கப் பட்ட நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகளில் உயர்வு காணப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 9 அன்று 11,470.70 புள்ளிகளில் தேசிய பங்கு சந்தையின் நிப்டி குறியீடு முடிவுற்றது முந்தைய சாதனையாக இருந்தது. நேற்று அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் சென்செக்ஸ் முன்னெப் போதும் இல்லாத வகையில் 78.65 புள்ளிகளும் (0.75%), நிப்டி 41.25 புள்ளிகளும் (0.36%) உயர்வு கண்டன.

யெஸ் வங்கி, கிராசிம் இண் டஸ்ட்ரீஸ், லுபின், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, ஹெச்யூஎல், ஐடிசி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி, எம் அண்ட் எம், அதானி போர்ட்ஸ், சன் பார்மா, எல் அண்ட் டி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, இன்போசிஸ், ஆர்ஐஎல், டிசிஎஸ், இண்டஸ்இந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற பங்குகள் அதிகபட்சமாக 3.76% அளவுக்கு ஏற்றம் கண்டன. ஹீரோ மோட்டோகார்ப், மாருதி, ஓஎன்ஜிசி, கோல் இந்தியா மற்றும் பஜாஜ் ஆட்டோ பங்குகள் அதிக அளவில் வீழ்ச்சி கண்டன.

நேற்று முன்தினம் உள்ளூர் முத லீட்டாளர்கள் ரூ.133.78 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.825.08 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 47 நாடுகளின் பங்கு சந்தைகளை உள்ளடக்கிய எம்ஐசிஐ பட்டியல் முந்தைய நாளைவிட நேற்று 0.2 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 mins ago

சினிமா

23 mins ago

தமிழகம்

30 mins ago

வலைஞர் பக்கம்

33 mins ago

தமிழகம்

46 mins ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்