மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.11 - 17

By செய்திப்பிரிவு

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்) - கிரகநிலை: ராசியில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

பலன்: இந்த வாரம் பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். குடும்பத்தில் இருந்து வந்த தேவையற்ற குழப்பங்கள் சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணிச்சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு நிதானத்தை கடை பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு

பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவான், விநாயகரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும்.

***********

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) - கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.

பலன்: இந்த வாரம் உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். பெண்கள் மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினருக்கு சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும்.

அரசியல்வாதிகள் உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மனதில் நிம்மதி ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்தி கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.


***********

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கிரகநிலை: ராசியில் குரு(வ)- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.

பலன்: இந்த வாரம் வீண் கவலை அகலும். எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்துக்கள் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும்.

கலைத்துறையினருக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்யுங்கள். அரசியல்வாதிகள் மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

பரிகாரம்: முருகனை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும். கடன் பிரச்சினை தீரும்.

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஆக.11 - 17

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 mins ago

சினிமா

28 mins ago

தமிழகம்

35 mins ago

வலைஞர் பக்கம்

38 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்