இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கணவன் - மனைவி இடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லுங்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதரர் வகையில் எதிர்பாராத மனத்தாங்கல் ஏற்படக் கூடும்.

ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசியும் ஆதரவும் கிட்டும். கடனை பைசல் செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். உங்களின் முயற்சிகளுக்கு தாயாரின் ஆதரவு கிடைக்கும் சொத்து தொடர்பாக நிலவிய சிக்கலில் ஒன்று தீரும். பணவரவு உண்டு.

துலாம்: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கலைப் பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். நண்பரால் ஆதாயம் உண்டு. அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாதீர்கள்.

தனுசு: பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேலை விஷயமாக நல்ல தகவல் வரும்.

மகரம்: சாதுர்யமாகப் பேசும் கலையை கற்றுக் கொள்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு.

கும்பம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்க திட்டமிடுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். சொத்து வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

மீனம்: முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் காட்டாதீர்கள். முன்கோபத்தால் இழப்புகள் ஏற்படக்கூடும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

தமிழகம்

20 mins ago

வலைஞர் பக்கம்

23 mins ago

தமிழகம்

36 mins ago

சினிமா

59 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்