Published on : 19 Mar 2024 19:41 pm

விடைபெற்ற தமிழிசை @ புதுச்சேரி ராஜ்நிவாஸ் - போட்டோ ஸ்டோரி

Published on : 19 Mar 2024 19:41 pm

1 / 7
தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்புக்கும் கூடுதலாக நியமிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதையொட்டி இப்பதவிகளை ராஜிநாமா செய்தார். அதை குடியரசுத்தலைவர் ஏற்றார்.
2 / 7
இந்நிலையில் புதுச்சேரி ராஜ்நிவாஸுக்கு இன்று மதியம் வந்தார். அவரை முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்தனர். முதல்வர் ரங்கசாமி ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, புதுச்சேரிக்கு பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்தார்.
3 / 7
தெலங்கானா சென்று விட்டு புதுச்சேரி வருவதாக குறிப்பிட்டதாக பேசிக்கொண்டனர். பின்னர் சிறிது நேரம் தமிழிசையிடம் பேசி விட்டு ரங்கசாமி புறப்பட்டார். அவர் கூறுகையில், "தேர்தலில் போட்டியிடும் தமிழிசை, வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தேன். அவரது ஆளுநர் பணி நன்றாக இருந்தது.
4 / 7
தேசிய ஜனநாயக க்கூட்டணியில் பாமக இணைந்துள்ளது மகிழ்ச்சி. எங்களது கூட்டணியின் வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது. புதுச்சேரி பாஜக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்" என்று குறிப்பிட்டார்.
5 / 7
அதேபோல் உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், தமிழிசையை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து மாலை ராஜ்நிவாஸிலிருந்து தமிழிசை புறப்பட்டார்.
6 / 7
தமிழிசைக்கு காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை தரப்பட்டது. அதைத் தொடர்ந்து தலைமைச் செயலர் சரத் சவுகான், டிஜிபி ஸ்ரீனிவாஸ், அரசு செயலர்கள் என பலரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
7 / 7
புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட போது மணக்குளவிநாயகர் கோயில் சென்று சாமி கும்பிட்டு விட்டு தமிழிசை சென்னைக்கு புறப்பட்டு சென்றார். | தகவல் ஞானபிரகாஷ் | படங்கள்: எம்.சாம்ராஜ்

Recently Added

More From This Category

x