Published on : 18 Feb 2024 13:04 pm

பழவேற்காடு ஏரியில் உயிரிழந்த அரிய தட்டைவாயன் வாத்துகள் - போட்டோ ஸ்டோரி

Published on : 18 Feb 2024 13:04 pm

1 / 32
பழவேற்காடு ஏரிக்கு வலசை வந்த 500-க்கும் மேற்பட்ட அரிய வகை தட்டைவாயன் வாத்துகள் உயிரிழப்பு | படங்கள்: பி.ஜோதி ராமலிங்கம்
2 / 32
திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக பழவேற்காடு ஏரி விளங்குகிறது. தற்போது சீசன் என்பதால் பறவைகள் இங்கு வலசை வந்துள்ளன.
3 / 32
சுமார் 10 ஆயிரம் எண்ணிக்கையில் வலசை வந்துள்ள பிளமிங்கோ, உள்ளான் உள்ளிட்ட பறவை வகைகளில் ஒன்று தட்டைவாயன் (Northern shovellers) வாத்து.
4 / 32
அரிய வகையான இந்த வாத்து, முதல் முறையாக பிப்ரவரி தொடக்கத்தில்தான் பழவேற்காடு ஏரிக்கு வலசை வந்துள்ளதாக பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
5 / 32
அவ்வாறு வலசை வந்துள்ள இந்த தட்டைவாயன் வாத்துகள், பழவேற்காடு ஏரியில், அண்ணாமலைச்சேரியை ஒட்டிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
6 / 32
இதில், சுமார் 500-க்கும் மேற்பட்ட வாத்துகள் கடந்த ஒரு வாரத்தில், திடீரென மயங்கி உயிரிழந்துள்ளன. இதுகுறித்து, தகவலறிந்த மக்கள் இறைச்சிக்காக அள்ளிச் சென்றுள்ளனர்.
7 / 32
பழவேற்காடு ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள இறால் பண்ணைகள் மற்றும் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் யூரியா போன்ற ரசாயனம் கலந்த நீரால் தட்டைவாயன் வாத்துகள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது என, மீனவர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
8 / 32
ஆனால், வனத்துறை அதிகாரிகளோ, “பழவேற்காடு ஏரிக்கு இதுவரை வலசை வந்த பறவைகள் உயிரிழந்தது கிடையாது. ஆனால், தற்போது தட்டைவாயன் வாத்துகள் உயிரிழந்துள்ளன.
9 / 32
பழவேற்காடு ஏரியில், அண்ணாமலைச்சேரியை ஒட்டியுள்ள பகுதிகளில் உயிரிழந்துள்ள இந்த தட்டைவாயன் வாத்துகளின் எண்ணிக்கை சுமார் 60 தான்.
10 / 32
அவ்வாறு உயிரிழந்துள்ள வாத்துகளில் பெரும்பாலானவை அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. அவ்வாறு மீட்கப்பட்ட வாத்துகளில் கணிசமான வாத்துகளின் உடல்களை மண்ணில் புதைத்து விட்டோம்.
11 / 32
இந்த வாத்துகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பதை அறிய, 5 வாத்துகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக சென்னை - தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை, வேப்பேரியில் கால்நடை மருத்துவக் கல்லூரி, திருப்பாலைவனம் கால்நடை மருத்துவமனை ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ளோம்.
12 / 32
பிரேத பரிசோதனை அறிக்கைகள் வந்த பிறகுதான், உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும். மேலும், கடந்த இரு நாட்களாக பழவேற்காடு ஏரி பகுதியில் வாத்துகள் உயிரிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது” என தெரிவித்துள்ளனர். | படங்கள்: பி.ஜோதி ராமலிங்கம்
13 / 32
14 / 32
15 / 32
16 / 32
17 / 32
18 / 32
19 / 32
20 / 32
21 / 32
22 / 32
23 / 32
24 / 32
25 / 32
26 / 32
27 / 32
28 / 32
29 / 32
30 / 32
31 / 32
32 / 32

Recently Added

More From This Category

x