Published on : 17 Oct 2022 17:03 pm

காவிரியில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராமங்களில் பாதிப்பு - புகைப்படத் தொகுப்பு

Published on : 17 Oct 2022 17:03 pm

1 / 13

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. புகைப்படங்கள்: லெட்சுமி நாராயணன் இ, கோவர்த்தன் எம்.

2 / 13

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே, அணைகள் நிரம்பி உள்ளதால், இவ்விரு அணைகளில் இருந்தும் உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

3 / 13

மேட்டூர் அணை நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடி, 16 கண் மதகுகள் வழியாக 1 லட்சத்து 73 ஆயிரத்து 500 கனஅடி என மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

4 / 13

மேட்டூர் அணை நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடி, 16 கண் மதகுகள் வழியாக 1 லட்சத்து 73 ஆயிரத்து 500 கனஅடி என மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

5 / 13

அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக்கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி நீர் வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும், நீர் வரத்து குறித்து கண்காணித்து வருகின்றனர்.

6 / 13

காவிரி கரையோர பகுதி மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. ஆற்றில் குளிக்க, துணி துவைக்க, செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

7 / 13

கரையோர பகுதிகளில் காவல், தீயணைப்பு, வருவாய் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

8 / 13

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

9 / 13

ஈரோடு மாவட்டம் பவானி, அம்மாப் பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, கருங்கல்பாளையம் காவிரிக் கரை, கொடுமுடி ஆகிய பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொடுமுடியில் கிராமத்துக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

10 / 13

பவானி, கொடுமுடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், இந்தப் பகுதியை சேர்ந்த மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி வருவாய் துறையினர் செய்துள்ளனர்.

11 / 13
12 / 13
13 / 13

Recently Added

More From This Category

x