Published on : 24 May 2020 16:04 pm

பேசும் படங்கள்... (24.05.2020)

Published on : 24 May 2020 16:04 pm

1 / 38

கரோனா தடுப்பு முன்னெ`ரிக்கை ஊரடங்கால் முடங்கிப்போன கார் சவாரிகள்... மீண்டும் எப்போது சாலைகளில் பவனி வருவோமென காத்திருக்கின்றன.பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் பொம்மைகள் அடுக்கிவைக்கப்பட்டது போல் நிறுத்தப்பட்டிருக்கும் டாக்ஸிகள். படங்கள்:எம்.முத்துகணேஷ்

2 / 38
3 / 38

பொதுவாக கோடை காலத்தில் சாலையோரங்களில் திரும்பிய பக்கமெல்லாம் மாம்பழக் கடைகளைக் காண முடியும். அதே சமயம் வியாபாரமும் , கூட்டமும் அலைமோதும். ஆனால் தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையால் மாம்பழ வியாபாரம் பெரும் சரிவடைந்துள்ளது. மேலும் கரோனா அச்சத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவது குறைந்துள்ளதால் - மாம்பழ விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் மாங்காய் மற்றும் மாம்பழ வியாபாரிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர். சேலம் வின்சென்ட் பகுதியில் விற்பனைக்காக மாங்காய்களை தரம் பிரிக்கும் வியாபாரிகள். படம்: எஸ்.குரு பிரசாத்

4 / 38
5 / 38
6 / 38
7 / 38

சேலம் மாநகர் பகுதியில் கட்டுப்பாடுகளுடன் சலூன் கடைகள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சலூன் கடையில் முகக்ககவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணம் அணிந்தவாறு முடி திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் . படம்: எஸ்.குரு பிரசாத்

8 / 38

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து பிஹார் மாநிலத்துக்கு செல்வதற்காக காத்திருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

9 / 38
10 / 38
11 / 38

திருச்சி காவிரி, கொள்ளிடம் கரையோரத்தில் கொண்டையம் பேட்டை முதல் கல்லணை வரை 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்படுகின்றான. . ஊரடங்கு உத்தரவினால் முழுவதும் முடங்கி கிடந்த செங்கல் சூளை தொழில் தற்போது ஊரடங்கு தளர்வுக்கு பின்பு குறைந்த தொழிலாளர்களுடன் செயல்படுகிறது. பெரிய நிறுவனங்கள் கட்டுமான பணிகளை தொடங்காததால் செங்கல் சூளைகளில் வேலையை தொடங்கியும் விற்பனை இல்லை என சூளை தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் வெயில் காலம் என்பதால் தொடர்ந்து உற்பத்தி செய்து செங்கற்கல்ஸி தயார் நிலையில் வைக்கின்றனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்.

12 / 38
13 / 38
14 / 38

சென்னை தவிர்த்து பிற பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் சலூன் கடைகளை திறக்கலாம் என்ற அரசு அறிவிப்பையடுத்து, திருச்சியில் இன்று சலூன் கடைகளில் முடி திருத்தம் , ஹேர் டை, முக அலங்காரம் செய்து கொள்ள ஏராளமானோர் ஆர்வம் காட்டினர். படம்: ஜி.ஞானவேல்முருகன்.

15 / 38

பிஹாரைச் சேர்ந்த வடமாநிலத்தொழிலாளார்கள்... 397 பேர் திருநெல்வேலியிலிருந்து பேரூந்து மூலம் மதுரை அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்து ரயில் வழியாக பீஹார் அழைத்துச்செல்லப்படுகின்றனர் . இவர்கள் அனைவருக்கும் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது. படங்கள் : மு. லெட்சுமி அருண்

16 / 38
17 / 38
18 / 38

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமலில் இருந்தாலும் மதுரையில் மீன் மார் க்கெட்டில் சமூக இடைவெளியின்றி... இன்று மீன் மார்க்கெட்டில் கூடியிருந்த கூட்டம். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி

19 / 38

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன், இன்று ராஜரத்தினம் மைதானத்தில், ஆயுதப்படை காவலர்களுக்காக புதிதாக நிறுவப்பட்ட Touch Free Handwash system -ன் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். வைத்தார் படங்கள்: க.ஸ்ரீபரத்

20 / 38
21 / 38
22 / 38

ஞாயிற்றுக்கிழமை மற்றும் கரோனா - கோடை விடுமுறையையொட்டி இன்று காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் மீன் வாங்க திரண்டிருந்த வியாபாரிகள். படம் க.ஸ்ரீபரத்

23 / 38
24 / 38
25 / 38

144 தடையுத்தரவு காரணமாக வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்கள் , ஆட்டோ ஓட்டுநர்கள், கோயில் பூசாரிகள் , மின் ஊழியர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேருக்கு திமுக கட்சி சார்பாக அரிசி, பலசரக்கு சாமான்களுடன்... காய்கறிகளும் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி டவுனில் நடைபெற்றது. படங்கள் : மு. லெட்சுமி அருண் .

26 / 38
27 / 38
28 / 38
29 / 38

இன்று உலக சகோதரர்கள் தினவிழா: திருநெல்வேலி ரயில்வே நிலையம் அருகில் இருக்கிறார். சுரேஷ். தன்னை ஆதரவற்றவர்... என சொல்லிக்கொள்ளும் இவர் - தனக்கு கிடைத்த பிஸ்கட் மற்றும் உணவுப் பொருட்களை.. தன்னை சுற்றியுள்ள நா ய்களுக்கு கொடுக்கிறார், அந்த நாய்களும் அவரை சுற்றி சுற்றி வந்து... வாலை ஆட்டிக்கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றன. ’’என்னபா... என் பெயர் சுரேஷ் பா , என் ஊரு ஈரோடு, நான் நல்லா கிரிக்கெட் விளையாடுவேன் பா , ஸ்பின் நல்லா போடுவேன் பா .. இது என்னோட ஃபிரெண்டுபா...’’ என அருகில் உள்ள நாய்க்குட்டியை எடுத்து அருமையாக கொஞ்சி விளையாடும் சுரேஷ்... சிறிது மனப்பிறழ்வு உள்ளவர். இன்று உலக சகோதரர்கள் நாள் .. எல்லா உயிர்களுக்கும் சகோதரத்துவம் பொதுவானதுதானே! படங்கள் . மு. லெட்சுமி அருண்

30 / 38
31 / 38
32 / 38

கோவை ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக ஜார்கண்ட் மாநிலத்துக்கு செல்வதற்காக ரயில் புறப்படவுள்ள கடைசி நேரத்தில் ஒரு கையில் குழந்தையையும் இன்னொரு கையில் மின்விசிறியியும் தோள் சுமையுடன் ஓடிவரும் வட மாநிலப் பெண். படம்: ஜெ .மனோகரன்

33 / 38

கோவை ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக ஜார்கண்ட் மாநிலத்துக்கு செல்வதற்காக ரயில் புறப்படவுள்ள கடைசி நேரத்தில் ஓடிவரும் வட மாநிலத் தொழிலாளிகள். படம்: ஜெ .மனோகரன்

34 / 38

கோவை ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக ஜார்கண்ட் மாநிலத்துக்கு செல்லவிருக்கும் வட மாநிலத் தொழிலாளர்களை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. படம்: ஜெ .மனோகரன்

35 / 38

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அமலில் இருக்கும் ஊரடங்கு நாட்களில் - கோவைப் பகுதியில் - பாதிப்புற்ற ஏழை எளிய மக்களுக்கு - அதிமுக கட்சியில் சார்பில் நிவாரணப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டது. படம் : ஜெ .மனோகரன்

36 / 38

புதுச்சேரியில் - நாளை முதல் மது கடைகள் திறந்திருக்கும் என புதுவை அரசு அறிவித்ததை அடுத்து... மதுபானக் கடைகளின் முன்பு... மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையாக வருவதற்உ... வசதியாக தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன, படங்கள்: எம்.சாம்ராஜ்

37 / 38
38 / 38

யாரை நொந்துகொள்வது?: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்கான ஊரடங்கு இப்போதும் அமலில்தான் உள்ளது. ஒருசில கட்டுப்பாடுகள் மட்டுமே தளர்த்தப்பட்டுள்ளன. இப்போதும் கரோனா குறித்த அச்சம் மக்களைவிட்டு அகலவே இல்லை. இந்நிலையில் - புதுச்சேரி சாலையொன்றில் இரு சக்கர வாகனத்தில் ஐந்து பேரை ஏற்றிக்கொண்டு எதைப் பற்றியும்... எவரைப்பற்றியும் கவலையின்றிச் செல்கிறார் ஒருவர். அதைப் பார்த்த ஒருவர் ‘’கொஞ்சம் இடம் கொடுத்தாப் போதுமே... மரத்தையே புடுங்கிடுவீங்களே...’’ என்றார் கோபமாக. படம்: எம்.சாம்ராஜ்

Recently Added

More From This Category

x