நித்யா மேனன் முதல் ரஹ்மான் வரை: தேசிய விருதுகள் நிகழ்வு ஆல்பம்
Published on : 08 Oct 2024 17:46 pm
1 / 11
2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று புது டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக நித்யா மேனனுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
2 / 11
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ‘காந்தாரா’ திரைப்படத்துக்காக ரிஷப் ஷெட்டி பெற்றார்.
3 / 11
‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’ என்ற பாடலுக்காக, நடன இயக்குநர் சதீஷ் தேசிய விருது பெற்றார். பாலியல் புகாரில் சிக்கிய ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4 / 11
சிறந்த தமிழ் படமாக ‘பொன்னியின் செல்வன் 1’ தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து இயக்குநர் மணிரத்னத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
5 / 11
‘பொன்னியின் செல்வன் 1’ படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.
6 / 11
‘பொன்னியின் செல்வன் 1’ படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை ரவிவர்மனுக்கு வழங்கினார் குடியரசுத் தலைவர்.
7 / 11
சிறந்த மலையாள திரைப்படமாக ‘சவுதி வெள்ளைக்கா’ தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அதன் இயக்குநர் தருண் மூர்த்திக்கு தேசிய விருதை வழங்கினார் திரவுபதி முர்மு.
8 / 11
சிறந்த நடிகருக்கான ஜூரி விருது ‘குல்மோஹர்’ படத்துக்காக மனோஜ் பாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது.
9 / 11
சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை ‘ஆட்டம்’ மலையாளப் படத்துக்காக இயக்குநர் ஆனந்த் ஏகார்ஷிக்கு வழங்கப்பட்டது.
10 / 11
தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. அப்போது அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது.
11 / 11
சிறந்த சண்டை பயிற்சியாளர் விருது, ‘கே.ஜி.எஃப்’ படத்துக்காக அன்பறிவ் சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது.