’தங்கலான்’ முதல் ‘வாழை’ வரை: ஆகஸ்ட்டில் அணிவகுக்கும் 15 படங்கள்!
Published on : 24 Jul 2024 18:49 pm
1 / 15
சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி திரைக்கு வருகிறது
2 / 15
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது.
3 / 15
இளையராஜா இசையமைப்பில் அறிமுக இயக்குநர் பரி இளவழகன் இயக்கத்தில் அம்மு அபிராமி நடித்துள்ள ‘ஜமா’ படம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
4 / 15
நகுல் நடித்துள்ள ‘வாஸ்கோடகாமா’ ஆகஸ்ட் 2-ல் வெளியாகிறது.
5 / 15
ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ‘மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
6 / 15
வேல ராம மூர்த்தியின் ‘வீராயி மக்கள்’ ஆகஸ்ட் 9-ல் திரைக்கு வருகிறது.
7 / 15
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
8 / 15
தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
9 / 15
கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வருகிறது.
10 / 15
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘டிமான்டி காலனி 2’ ஆகஸ்ட் 15-ல் திரைக்கு வருகிறது.
11 / 15
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியாகிறது.
12 / 15
சூரி, அன்னாபென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ ஆகஸ்ட் 23-ம் தேதி திரைக்கு வருகிறது.
13 / 15
நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ 23-ல் ரிலீஸ். தமிழிலும் படத்தை காணலாம்.
14 / 15
ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா மோட்வானி நடித்துள்ள ‘காந்தாரி’ திரைப்படம் திரைக்கு வருகிறது.
15 / 15
அருண் விஜய் பாலாவின் ‘வணங்கான்’ ஆகஸ்ட்டில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.