நடிகர் விஜய் நிகழ்வில் கவனம் ஈர்த்த 10 தருணங்கள் - போட்டோ ஸ்டோரி
Published on : 03 Jul 2024 19:48 pm
1 / 10
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய், “நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என்று பேசியிருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.
2 / 10
மேடையில் விஜய்யிடம் சிறுமி ஒருவர் ரோஜாப்பூ நீட்டினார். உடனே அந்த சிறுமியை செல்லமாக கண்டித்த விஜய் பின்பு பூவை வாங்கிக்கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
3 / 10
மேடையில் மாணவியின் தாய் ஒருவர் விஜய்க்காக ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடினார். இதைக்கேட்ட விஜய் சிரித்தார்.
4 / 10
இன்றைய நிகழ்வில் பார்வையற்ற மாணவி ஒருவர் பரிசையும் சான்றிதழையும் விஜய் கையிலிருந்து பெற்றுக்கொண்டார். தொடர்ந்து விஜய் மைக்கை பிடித்துக்கொள்ள அந்த மாணவி மேடையில் பேசினார்.
5 / 10
மேடையில் 2 மாத கைக்குழந்தைக்கு நடிகர் விஜய் ‘தமிழரசி’ என பெயர் சூட்டினார். விஜய் பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காகவே தன் மகளுக்கு பெயர் சூட்டாமல் காத்திருந்ததாக தந்தை தெரிவித்தார்.
6 / 10
பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கை மாணவி நிவேதாவுக்கு பரிசையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார் விஜய்.
7 / 10
விஜயைக் கண்டதும் மாணவிகள் மேடையில் கண்ணீர்மல்க நெகிழ்ந்த சம்பவங்களும் அரங்கேறின.
8 / 10
விஜய்க்கு பலூன் கொடுத்தது, கன்னத்தை கிள்ளியது உள்ளிட்ட சம்பவங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
9 / 10
மாணவி ஒருவர் விஜய் மற்றும் அவரது தாயார் ஷோபாவின் புகைப்படங்களை வரைந்து அவருக்கு பரிசளித்தார்.
10 / 10
மேடையில் விஜய்க்கு மாணவி ஒருவர் சல்யூட் அடித்த நிகழ்வு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.