Published on : 01 Nov 2023 19:28 pm

விஜய்யின் ‘லியோ’ வெற்றி விழா ஆல்பம்

Published on : 01 Nov 2023 19:28 pm

1 / 64

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மடோனா சபாஸ்டின், மேத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ் 'பிக் பாஸ்' ஜனனி, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

2 / 64

பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கின் நடுவே விருந்தினர்கள் நடந்து செல்வதற்காக ‘ராம்ப்’ (Ramp) அமைக்கப்பட்டுள்ளது. அதில் விருந்தினர்கள் நடந்து வரும்போதே சூழ்ந்திருந்த ரசிகர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். குறிப்பாக விஜய் கையசைத்து நடந்து வரும்போது மொத்த அரங்கமே கரவொலி எழுப்பியது. விழா தொடங்குவதற்கு முன்னதாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

3 / 64

பின்னர் விழாவில் பேசிய நடன இயக்குநர் தினேஷ், “நெஞ்னிலே படத்தில் வரும் ‘தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்ட எழுதி தரட்டுமா’ பாடலில் நான் ‘பேக் டேன்சர்’. ‘குஷி’ படத்தில் உதவி நடன இயக்குநர். இப்போது இந்தப்படத்தின் ‘நான் ரெடி தான்’ பாடலில் நடன இயக்குநர். விஜயுடனான எனது பயணம் அற்புதமானது. அன்று தொடங்கி இன்று வரை அவர் மாறவேயில்லை.

4 / 64

குத்து பாடல்களில் மட்டுமல்ல, மெலோடி பாடல்களில் விஜய் அட்டகாசமாக நடனமாடுவார். ‘துப்பாக்கி’ படத்தில் வரும் ‘வெண்ணிலவே’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். படத்திலேயே மன்சூர் அலிகானைத் தான் கஷ்டப்பட்டு ஆட வைத்தேன். நான் ஒன்று சொல்வேன். ஓகேன்னு சொல்லிட்டு வேற ஒன்னு ஆடுவாரு.” என்றார்.

5 / 64

மிஷ்கின் பேசுகையில், “சில மாதங்களுக்கு முன்பு ஏர்போர்ட் சென்றிருந்தபோது அங்கிருக்கும் ஒருவர் ‘லியோ’ அப்டேட் கேட்டார். கடந்த வாரம் ஸ்வீடன் சென்றேன். அங்கே ஒருவர் விஜய் என்ன சொன்னாரு என்று கேட்டார். வாழ்க்கையில் நான் புரூஸ்லீ மற்றும் மைக்கேல் ஜாக்சன் ஆகிய இரண்டு லெஜண்டுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

6 / 64

விஜய் நான் கண்ணால் பார்த்த ஒரு லெஜண்ட். அவர் வாழ்க்கையில் உச்சம் தொட்டுவிட்டார். அவருடன் படம் பண்ண வேண்டும் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை. சில நாட்களுக்கு முன்பு நான் விஜய் பற்றி தவறாக பேசியதால் இறந்துவிட்டேன் என ஒரு போஸ்டர் பார்த்தேன். இதை விஜய் ரசிகர் செய்திருக்க மாட்டார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

7 / 64

காரணம் விஜய் உடன் இருந்தால் வாழத்தான் முடியும். எப்படி சாக முடியும்?. 25 வருடமாக எப்படி ஒரு மனிதர் இப்படி காந்தமாக ஈர்க்க முடியும்? இந்த மேடையில் இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விஜய் ‘ஜேம்ஸ்பாண்ட்’ போன்ற ஒரு படத்தில் நடிப்பதை நான் பார்க்க வேண்டும்” என்றார்.

8 / 64

லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ““எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்த விஜய்க்கு நன்றி. லவ் யூ. பூஜைக்குப் பிறகு இந்தப் படம் தொடர்பாக எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை. முதல் மேடை, வெற்றி விழா மேடை என்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் எந்த புரமோஷனும் படத்துக்கு செய்யவில்லை.

9 / 64

இசை வெளியீட்டு விழா நடக்காதது எனக்கும் வருத்தம்தான். கடைசி 20 நாட்கள் எடிட்டர் பிலோமின் ராஜ் ஸ்டூடியோவிலேயே தங்கியிருந்த எனது உதவி இயக்குநர்கள் 18 பேரை மேடைக்கு அழைக்கிறேன்” என கூறி அவர்களை அழைத்து கவுரப்படுத்தினார்.

10 / 64

மேலும் பேசிய அவர், “இயக்குநர் வெற்றிமாறனை எனது 2-3 படங்களில் வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் அதை மறுத்துவிட்டார். அவரை நடிகராக மாற்ற வேண்டும் என ஆசை. விரைவில் அப்படி மாற்றுவேன் என நினைக்கிறேன். படத்தின் இறுதி வெர்ஷனை பார்த்துவிட்டு நடிகர் விஜய் என்னை கட்டி அணைத்து முத்தமிட்டார்.

11 / 64

மிகவும் சந்தோஷமாக இருந்தது” என்றார். அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர், ‘என்ன கிஃப்ட் எதிர்பார்க்கிறீர்கள்?’ என கேட்டதற்கு, “ஹெலிகாப்டருக்கு பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன். காத்திருக்கிறேன்” என்றார் லோகேஷ்.

12 / 64

நடிகர் மன்சூர் அலிகான், “நேற்று இரவு ஒரு மணிக்கு கனடாவிலிருந்து ஒரு போன்கால் வந்தது. நீங்க எப்டி ‘லியோ’ல பொய் சொல்லலாம்னு ஒருத்தன் கேக்குறான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

13 / 64

படத்தில் ஒரு பெரிய பிரச்சினை வரும்போது யாரோ விஜயகாந்த் போல ஒருவர் வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது மரியம் ஜார்ஜ் வந்து நிற்கிறார். செம்ம அறிமுகம். தியேட்டரே அதிருகிறது. தமிழகத்தின் நாளைய தீர்ப்பு விஜய்” என மன்சூர் அலிகான் பேசினார்.

14 / 64

மடோனா செபாஸ்டியன் பேசுகையில், “இந்தப் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தபோது, பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் நடிக்கப் போகிறோம் என ஆர்வத்துடன் வந்தேன். என்னுடைய கதாபாத்திரம் குறித்து கேட்டபோது, ‘மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம். நம்பி வாங்க’ என்றார்.

15 / 64

அவர் கூறியது போல், அற்புதமான அனுபவமாக இருந்தது. குறுகிய காலத்தில் நான் பல நடிகர்களுடன் பணியாற்றினேன். விஜய் ரசிகர்கள், எல்சியூ ரசிகர்களுக்கு நன்றி” என மடோனா கூறினார்.

16 / 64

கவுதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், “நான் கேட்டது யோகன் அத்தியாயம் ஒன்று. ஆனால், நான் மனதார சொல்கிறேன் அவர் எனக்கு கொடுத்தது ‘லியோ’. இந்தப் படத்துக்காக லலித் கொடுத்த சம்பளம் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. ‘வாரிசு’ படத்தில் ஸ்ரீகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியிருந்தது.

17 / 64

ஆனால், நடிக்க முடியவில்லை. விஜய் ரொமான்டிக் படங்களுக்கு சரியான நபர். அதுக்கான கதவு ஒருநாள் திறக்கும். அப்போ பண்ணுவாரு. அது நம்ம தேடிப் போகக் கூடாது. அதுவா வரணும்” என்றார்.

18 / 64

அர்ஜுன் பேசுகையில், “மக்கள் என்னை எங்கு பார்த்தாலும் ஜெய்ஹிந்துன்னு சொல்வார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு ‘த்தேறிக்க’ என்கிறார்கள். ‘மங்காத்தா’ படத்தில் த்ரிஷாவுடன் நடித்தேன். அதன் பிறகு ‘லியோ’வில் நடித்திருக்கிறேன். இரண்டு படங்களிலும் ஜோடியாக இல்லை.

19 / 64

சிவாஜிக்கு பிறகு விஜய்யிடம் நேரம் தவறாமையை பார்க்கிறேன். 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 7 மணிக்கே செட்டுக்கு வந்துவிடுவார். அவ்வளவு அர்ப்பணிப்புள்ள சிம்பிளான ஒருவர். விஜய்க்கு தலைவருக்கான தகுதி உள்ளன. விரைவில் அவர் அரசியலுக்கு வந்துவிடுவார்” என அர்ஜுன் பேசினார்.

20 / 64

படத்தின் எழுத்தாளர் ரத்னகுமார், “நான் சினிமாவுக்கு வர முக்கியமான காரணம் விஜய்தான். நான் சிறுவயதிலிருந்தே விஜய் ரசிகன். தொடக்கத்தில், விஜய்யின் புகைப்படத்தை யார் பார்ப்பார்கள் என்று பத்திரிகைகள் எழுதி வந்தன.. ஆனால், தற்போது ஒரு புகைப்படத்தை காட்டியதும் திரையரங்கமே அதிருகிறது.

21 / 64

‘மாஸ்டர்’ படத்தில் ‘வாத்தி’ ரெய்டு பாடலை அந்தச் சூழலுக்கு தகுந்தாற்போல எழுதியிருந்தோம். ஆனால், அதன் பின்னர் நாங்கள் படப்பிடிப்பு நடத்திகொண்டிருந்த நெய்வேலியில் உண்மையாகவே ரெய்டு வந்துவிட்டனர்.

22 / 64

லியோவில் ‘நான் ரெடி தான் வரவா’ பாடலை கதைக்களத்துக்காக எழுதியிருந்தோம். ஆனால், இப்போது அந்தப் பாடலை என்னவாக மாறியிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். நான் விஜய்யுடன் இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவர் எப்போதும் நிற்க வைத்து யாருடனும் பேசமாட்டார். நாம் பேசப்போனாலே அமர வைத்து தான் பேசுவார். அவர் யாரையும் உயர்வானவராகவோ, தாழ்வானவராகவோ பார்க்க மாட்டார். எல்லோரையும் சமமானவராகவே பார்ப்பார். எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தானே ஆக வேண்டும்” என்றார் ரத்னகுமார்.

23 / 64
24 / 64
25 / 64
26 / 64
27 / 64
28 / 64
29 / 64
30 / 64
31 / 64
32 / 64
33 / 64
34 / 64
35 / 64
36 / 64
37 / 64
38 / 64
39 / 64
40 / 64
41 / 64
42 / 64
43 / 64
44 / 64
45 / 64
46 / 64
47 / 64
48 / 64
49 / 64
50 / 64
51 / 64
52 / 64
53 / 64
54 / 64
55 / 64
56 / 64
57 / 64
58 / 64
59 / 64
60 / 64
61 / 64
62 / 64
63 / 64
64 / 64

Recently Added

More From This Category

x