1 / 21
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விக்ரம், “வரலாற்றில் இருக்கும் நல்ல விஷயங்களை கொண்டாடவேண்டும். கெட்ட விஷயங்களை மறக்க கூடாது. அது இனியும் நடக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். ரஞ்சித் மிக அழகாக கதைக்களத்தை விவரித்தார். சில விஷயங்களை நாம் மறந்துவிடுகிறோம்.
2 / 21
அப்படி நாம் மறந்ததை சித்தரித்திருக்கிறோம். அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சமூகத்தினரின் வாழ்வியலைப் பேசும் இப்படம் நம்மை அழவைத்து சோகத்தை பிழியாமல் நிகழ்வுகளை யதார்த்தமாக பேசும் படைப்பாக இருக்கும்.
3 / 21
கேஜிஎஃப்பில் தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தினோம். காலையில் அவ்வளவு வெப்பமாகவும், இரவில் அப்படியொரு குளிரும் இருக்கும். வெறும் கோவணத்தை கட்டிக்கொண்டு நடிக்க வேண்டியிருந்தது.
4 / 21
‘ஒரு தேள் கொண்டுவாடா’ என ரஞ்சித் சொன்ன 10 நிமிடத்தில் தேள் இருக்கும். பாம்பு கொண்டுவா என்றால் 5 நிமிடத்தில் இருக்கும். எங்கு பார்த்தாலும், பாம்பு, தேள்கள் உலாவும் இடம் அது. அப்படியான இடத்தில் செருப்பு இல்லாமல், பார்த்து பார்த்து நடந்தோம்.
5 / 21
அப்போதுதான் அந்த இடத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை உணர்ந்தோம். என்னுடைய உடை தொடங்கி தோற்றம் எல்லாமே அவர்களின் வாழ்வியல் தான். மேக்கப்புக்கு மட்டும் 4-5 மணி நேரம் ஆகும். படப்பிடிப்பு தளத்துக்கு சென்றபிறகு கோவணத்தை கட்டிக்கொண்டு கதாபாத்திரமாகவே மாறிவிடுவோம்” என்றார் நடிகர் விக்ரம்.
6 / 21
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “ஞானவேல் ராஜா என்னை மிகவும் நம்பியிருக்கிறார். என்னுடைய படங்கள்தான் இந்த நம்பிக்கையை அவரிடம் ஏற்படுத்தியிருக்கிறது. என்னுடைய முதல் படமான ‘அட்டகத்தி’ தொடங்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அவருக்கும் எனக்குமான உறவு இருந்து வருகிறது. அந்த உறவை ‘தங்கலான்’ இன்னும் உறுதிப்படுத்தும் என நம்புகிறேன்.
7 / 21
கமர்ஷியல் படங்களை இயக்கும் அவர், ஆர்டிஸ்டிக்கான படத்தை தயாரிப்பதை என்னிடமிருந்தே தொடங்குகிறார் என நினைக்கிறேன். இந்த டீசருக்கு கூட அவரை திருப்திப்படுத்த மிகவும் கஷ்டப்பட்டேன். இறுதியில் டீசர் அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது என கூறினார்.
8 / 21
விக்ரமை நான் என்னுடைய கல்லூரி காலத்திலிருந்து பார்த்து வருகிறேன். அவர் கமர்ஷியலாக நிறைய படங்கள் நடித்திருக்கிறார். நடிகராக அவர் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. அவருடன் இணைந்து பணியாற்ற போகிறோம் என்றபோது எப்படியான கதைக்களத்தை தேர்தெடுப்பது என யோசித்து பீரியட் டிராமாவை தேர்ந்தெடுத்தேன்.
9 / 21
இந்தக் கதைக்களத்தை அடுத்த கட்டத்துக்கு அவர் நகர்த்தி சென்றுவிடுவார் என நினைத்தேன். ஒரு நடிகராக அந்த கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். ஒருநாள் அவரிடம், ‘இத்தனை வருடத்துக்குப் பிறகும் எதற்காக இப்படி உழைக்கிறீர்கள்? எது உங்களை இந்த அளவுக்கு உந்தித் தள்ளுகிறது?’ என கேட்டேன்.
10 / 21
இடையில் அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு அவர் படப்பிடிப்புக்கு வந்ததும் ஸ்டண்ட் காட்சி எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. படப்பிடிப்பின்போது மட்டும் நான் பயங்கரமான சுயநலவாதியாக இருப்பேன். காரணம், என்னை நம்பி வந்திருக்கிறார். அதற்கு நியாயம் சேர்க்க வேண்டும் என நினைப்பேன்.
11 / 21
ஒரு கட்டத்தில் விக்ரமின் உழைப்பையும் ஈடுபாட்டையும் பார்த்து எனக்கு பயம் வந்துவிட்டது. சொல்லப்போனால் அதுதான் படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்ற ஊக்கத்தை கொடுத்தது. படத்துக்காக நிறைய கஷ்டப்பட்டார். அந்தக் கதாபாத்திரத்தை யதார்த்தமாக காட்ட கடினமாக உழைத்தார்.
12 / 21
பார்வதி, மாளவிகாவின் சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம். இந்தப் படம் உங்களுக்குள் உறவாடும் என நினைக்கிறேன். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் கடும் உழைப்பை செலுத்தியிருக்கிறார்.
13 / 21
படத்தில் விஎஃப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. விஎஃபெக்ஸ் படங்களுக்கு இந்தப் படம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நினைத்து வேலை செய்தோம். உங்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தப் படம் அதனை முழுமையாக பூர்த்தி செய்யும் என நான் நம்புகிறேன்.
14 / 21
இதில் பேசியிருக்கும் விஷயம் மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். தொன்மத்துக்கும், வரலாற்றுக்கும் இடையில் இருக்கும் நம்பிக்கையை இந்தப் படம் பேசும். தமிழ் சினிமாவுக்கு முக்கியமான படமாக இது இருக்கும்” என்று பா.ரஞ்சித் பேசினார்.
15 / 21
லைவ் சவுண்ட் குறித்து அனுபவம் பகிர்ந்த நடிகர் விக்ரம், “முதன்முறையாக நான் லைவ் சவுண்டில் நடித்திருக்கிறேன். இதனால் உச்சரிப்பு, அதற்கான டோன், அந்த காலத்தின் பேச்சுவழக்கு தொடங்கி எல்லாத்தையும் கவனித்து நடிக்க வேண்டும்.
16 / 21
சிலசமயம் நடிக்கும்போது குரலில் மாற்றத்தை கொண்டுவரும்போது, அதற்கேற்ப முகபாவனை ஒத்துப்போகாது. இரண்டையும் சரிவர கவனிக்க வேண்டும். பெரும்பாலான ஷாட்கள் சிங்கிள் ஷாட்கள் தான்
17 / 21
ஒரு சீன் 2 ஷாட்களில் முடியும். கேமராக சுற்றிக்கொண்டேயிருக்கும். ஒரு தடவை மிஸ்ஸானால் மீண்டும் தொடக்கத்திலிருந்து நடிக்க வேண்டும். ரஞ்சித்தும் எங்களுக்காக படப்பிடிப்பில் கோவணத்துடன் தான் இருந்தார்” என்றார் விக்ரம்.
18 / 21
இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, பா.ரஞ்சித், ஜி.வி.பிரகாஷ்குமார், எழுத்தாளர் தமிழ்பிரபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
19 / 21
20 / 21
21 / 21