கோவையில் தொடரும் கனமழை - புகைப்படத் தொகுப்பு by ஜெ.மனோகரன்
Published on : 21 May 2024 17:32 pm
1 / 17
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தை தவிர்க்கும் வகையில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. சில சமயங்களில் கோடைமழை கன மழையாகவும் பெய்து வருகிறது. | படங்கள்: ஜெ.மனோகரன்
2 / 17
இந்நிலையில் நேற்று (மே 20) கோவையில் பல்வேறு இடங்களில் மழை தூறல் இருந்தது. மாவட்ட நிர்வாகத்தினர் இன்று (மே 21) காலை வெளியிட்ட அறிக்கையின் படி சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 122 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
3 / 17
மாவட்ட நிர்வாகத்தினர் இன்று (மே 21) காலை வெளியிட்ட அறிக்கையின்படி கோவையில் பெய்த மழையளவு விவரம் பின்வருமாறு: கோவை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் 1.60 மில்லி மீட்டர்.
4 / 17
பி.என்.பாளையம் பகுதியில் 30.80 மில்லி மீட்டர், மேட்டுப்பாளையம் தாலுகாவில் மேட்டுப்பாளையத்தில் 37 மில்லி மீட்டர், பில்லூர் அணையில் 10 மில்லி மீட்டர் ,அன்னூர் தாலுகா உட்பட்ட அன்னூர் பகுதியில் 31 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
5 / 17
சூலூர் தாலுகா உட்பட்ட சூலூரில் 3.20 மில்லி மீட்டர், பேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட சிறுவாணி அடிவாரப் பகுதியில் 30 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகா உட்பட்ட சின் கோனாவில் 66 மில்லி மீட்டர்.
6 / 17
சின்னக்கல்லாரில் 122 மில்லி மீட்டர் வால்பாறை பிஏபியில் 80 மில்லிமீட்டர் , வால்பாறை தாலுகாவில் 54 மில்லி மீட்டர் ,சோலையாரில் 25 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
7 / 17
தொடர்ச்சியாக மழை பெய்து வரும் சூழலில் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், ஆனைமலை ஆகிய பகுதிகளில் உரிய உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
8 / 17
9 / 17
10 / 17
11 / 17
12 / 17
கோவையில் பெய்த மழையில் புளியகுளம் பகுதியில் உள்ள வீட்டின் மீது விழுந்த வேப்பமரம்.
13 / 17
14 / 17
15 / 17
16 / 17
17 / 17