தொடங்கியது பிளஸ் 2 பொதுத் தேர்வு - போட்டோ ஸ்டோரி by ஜெ.மனோகரன்
Published on : 01 Mar 2024 11:05 am
1 / 21
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 1) தொடங்கியது.
2 / 21
மார்ச் 22-ம் தேதி நடைபெற பிளஸ் 2 பொதுத் தேர்வில், முதல் நாளான இன்று (மார்ச் 1) தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு தொடங்கியது.
3 / 21
7,534 பள்ளிகளில் இருந்து 7.72 லட்சம் மாணவர்கள், 21,875 தனித் தேர்வர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர், 125 சிறை கைதிகள் என மொத்தம் 7.94 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
4 / 21
அறை கண்காணிப்பாளர் பணியில் 43,200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,335 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
5 / 21
மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
6 / 21
154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
7 / 21
ஹால் டிக்கெட்டில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுவது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக் கூடாது.
8 / 21
அவ்வாறு ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர் மீது, விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
9 / 21
ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
10 / 21
11 / 21
12 / 21
13 / 21
14 / 21
15 / 21
16 / 21
17 / 21
18 / 21
19 / 21
20 / 21
21 / 21