

கர்நாடக மாநில முன்னாள் முதல் வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட இன்றுமுதல் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
அரசியலைவிட்டு சில கால மாக ஒதுங்கி இருந்த அவர், மீண்டும் கட்சிப் பணியாற்ற முனைந்துள்ள தால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1999-2004ல் கர்நாடக முதல்வ ராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, தமது ஆட்சிக்காலத்தில் கர்நாட காவின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தார்.
பெங்களூரை தகவல் தொழில் நுட்ப (ஐடி) தலைநகராகவும் தோட்ட நகரமாகவும் மாற்ற அவர் முன்னெடுத்த திட்டங்கள் பலராலும் பாராட்டப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, முதுமை காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார்.
கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலிலும் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், அவருடைய இல்லத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் மாநில காங் கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.பரமேஸ் வரும் சென்று அவருடன் பேசி, தேர்தலில் கட்சிப் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தனர்.
அதனை ஏற்று இன்றுமுதல் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், எஸ்.எம்.கிருஷ்ணாவை கர்நாடக மாநில காங்கிரஸ் பிரச்சார குழு தலைவராக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கட்சிப் பணியில் ஈடுபட அவர் முனைந்திருப்பதால் மைசூர், மண்டியா, ராம்நகர் மற்றும் பெங்களூர் ஊரகத் தொகுதிகளில் உள்ள அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தேர்தலுக்கான வியூகம் வகுக்க, கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பெங் களூரில் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா வின் வீட்டில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டியா தொகுதி வேட்பாளரும் கிருஷ்ணா வின் ஆதரவாளருமான நடிகை ரம்யா கலந்துகொண்டார்.