Short news

கர்நாடகா பாஜக வேட்பாளரிடம் ரூ.4.8 கோடி பறிமுதல்

கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூரில் பாஜக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சுதாகர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரி முனிஷ் மவுத்கிலுக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் சுதாகரின் பண்ணை வீட்டில் சோதனை நடத்திய போது, ரூ.4.8 கோடி ரொக்கம் சிக்கியது. மேலும் சுதாகர் மீது மதநாயக்கஹள்ளி போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

x