Short news

மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ பிப்.23-ல் தமிழில் ரிலீஸ்!

மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பிரமயுகம்’ மலையாளப் படம் வரும் 23-ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. கருப்பு - வெள்ளை திரையனுபவத்துடன் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் 23-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் இப்படத்தை திரையரங்குகளில் காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

x