Short news

புதுவை சட்டப்பேரவையில் ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்: திமுக, காங்., வெளிநடப்பு

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய புதுவை சட்டப்பேரவை இன்று காலை 9.45 மணிக்கு கூடியது. தொடர்ந்து அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இதனையடுத்து, ஐந்து மாத செலவுக்கான ரூ.4634 கோடிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததால் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

x