Short news

ஆரோக்கியம்: சிறுநீர் அடைப்பைக் கட்டுப்படுத்தும் முள்ளங்கிக் கீரை

சூட்டைத் தணிக்கும் முள்ளங்கியைக் குழம்பைச் சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டு அதன் கீரையைத் தொடு உணவுக்குப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கிராமங்களில் பார்க்கலாம். வெப்பம் சார்ந்த அறிகுறிகள் ஏற்படுவதைத் தடுக்க வேனிற்காலத் தொடக்கத்திலேயே முள்ளங்கிக் கிழங்கு, முள்ளங்கிக் கீரையை உணவாக எடுத்துக்கொள்ளலாம். சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு முள்ளங்கிக் கீரையை அடிக்கடி சேர்த்து வரலாம். முள்ளங்கிக் கீரை, பழகிக்கொள்ள வேண்டிய கீரை!

x