Short news

அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு த்ரிஷா நோட்டீஸ்

முன்னாள் அதிமுக பிரமுகர் ஏ.வி.ராஜூவுக்கு த்ரிஷாவின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் த்ரிஷா குறித்து இணையத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் அத்தனை அவதூறுகளையும் நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்குள் இதுகுறித்து பதில் அளிக்குமாறும், த்ரிஷாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடு வழங்குமாறும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

x