“நான் மட்டும் தலையிட்டு இந்திய - பாக். போரை நிறுத்தி இருக்காவிட்டால்...” - ட்ரம்ப் மீண்டும் பேச்சு

3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள் என பாக். பிரதமர் கூறியதாக தகவல்
“நான் மட்டும் தலையிட்டு இந்திய - பாக். போரை நிறுத்தி இருக்காவிட்டால்...” -  ட்ரம்ப் மீண்டும் பேச்சு
Updated on
1 min read

வாஷிங்டன்: இந்​தியா- பாகிஸ்​தான் போரை நான் நிறுத்​தாமல் இருந்​திருந்​தால், 3.5 கோடி மக்​கள் இறந்​திருப்​பர் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்​னிடம் தெரி​வித்​தார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசி​யுள்​ளார்.

அமெரிக்​கா​வின் வெள்ளை மாளி​கை​யில் அதிபர் ட்ரம்ப் நேற்று முன்​தினம் பேசி​ய​தாவது: அமெரிக்க அதிப​ராக எனது முதல் 10 மாதங்​களில் 8 போர்​களை முடிவுக்​குக் கொண்டு வந்​தேன். நான் தலை​யி​டா​மல் இருந்​திருந்​தால் இந்​தி​யா​வுக்​கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்​பட்​டிருக்​கும். போரை நிறுத்த நான் முயற்சி எடுக்​காமல் இருந்​திருந்​தால் பாகிஸ்​தானில் 3.5 கோடி மக்​கள் இறந்​திருப்​பார்​கள் என்று பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்​னிடம் தெரி​வித்​தார்.

எனது நிர்​வாகம் 9-வது போரை முடிவுக்​குக் கொண்டு வர மிக​வும் கடின​மாக உழைத்து வரு​கிறது. ரஷ்​யா​வுக்​கும் உக்​ரைனுக்​கும் இடையி​லான போர் தொடங்​கிய தினத்​தில் நான் அதிப​ராக இருந்திருந்​தால் இது ஒரு​போதும் நடந்​திருக்​காது. போர் நிறுத்த ஒப்​பந்​தத்​தின் கீழ், உயிருடன் உள்ள அல்​லது இறந்த ஒவ்​வொரு பிணைக் கைதி​யும் வீடு திரும்​புவதை உறுதி செய்து வரு​கிறோம்.

உள்​நாட்​டிலும் வெளி​நாட்​டிலும் அமெரிக்​கர்​களுக்கு நாங்​கள் பெரு​மை​யுடன் பாது​காப்பை மீட்​டெடுத்து வரு​கிறோம். எனது வரிவி​திப்பு அச்​சுறுத்​தல் காரண​மாக தீர்த்து வைக்​கப்​பட்டு அமைதி நில​வு​கிறது. இவ்​வாறு அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார். இந்தியா- பாகிஸ்​தான் இடையி​லான போரை நிறுத்​தி​ய​தாக அதிபர் ட்ரம்ப் இது​வரை, சுமார் 80-க்​கும் அதி​க​மான முறை தெரிவித்​து​விட்​டார்.

இருப்​பினும், ட்ரம்​பின் பேச்சை மத்​திய அரசு தொடர்ந்து மறுத்து வரு​கிறது. இரு ​நாடு​களுக்கு இடையே​யான நேரடிப் பேச்சுவார்த்தை மூலமே போர் நிறுத்​தப்​பட்​ட​தாக இந்​திய அரசு விளக்​கம் அளித்து வரு​கிறது. இருந்​த ​போதும், இந்​தியா - பாகிஸ்தான் போரை தானே நிறுத்​தி​ய​தாக ட்ரம்ப் தொடர்ந்​து பேசி வரு​கிறார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

“நான் மட்டும் தலையிட்டு இந்திய - பாக். போரை நிறுத்தி இருக்காவிட்டால்...” -  ட்ரம்ப் மீண்டும் பேச்சு
அறவாழ்வின் அடையாளம்... | மக்களின் தோழர் நல்லகண்ணு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in