ஸ்​பெ​யினுக்​குள் ஊடுருவிய நிலையில் உணவு இல்லாமல் மீண்டும் மொராக்கோ திரும்பிய அகதிகள்

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுருவிய நிலையில் உணவு இல்லாமல் மீண்டும் மொராக்கோ திரும்பிய அகதிகள்
Updated on
1 min read

மாட்ரிட்: ஸ்​பெ​யினுக்​குள் ஊடுரு​விய அகதி​கள் உணவு இல்​லாமல் மீண்​டும் சொந்த நாடான மொராக்​கோவுக்கு திரும்பி உள்​ளனர்.

ஐரோப்​பிய கண்​டத்​தில் அமைந்​துள்ள ஸ்பெ​யினும், ஆப்​பிரிக்க கண்​டத்​தில் உள்ள மொராக்​கோ​வும் அண்டை நாடு​களாக உள்​ளன. முஸ்​லிம் நாடான மொராக்​கோ​வில் வறுமை, வேலை​வாய்ப்​பின்மை அதி​கரித்து வரு​கிறது. இதன்​காரண​மாக மொராக்கோ மக்​கள், வளமான ஸ்பெ​யின் நாட்​டுக்​குள் ஊடுருவ தொடர்ந்து முயற்சி செய்து வரு​கின்​றனர். கடந்த 2021-ம் ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்​களில் மொராக்​கோவை சேர்ந்த சுமார் 9,000 பேர் ஸ்பெ​யினுக்​குள் நுழைந்​தனர். அவர்​கள் திருப்பி அனுப்​பப்​பட்​டனர்.

இந்த சூழலில் மொராக்​கோவை சேர்ந்த சுமார் 70,000 பேர் நேற்று முன்​தினம் கடல் வழி​யாக ஸ்பெ​யினின் சியூட்டா நகரில் ஊடுரு​வினர். இதைத் தொடர்ந்து ஸ்பெ​யின் அரசு, ஆயிரக்​கணக்​கான ராணுவ வீரர்​களை சியூட்டா நகருக்கு அனுப்​பியது. ஒட்​டுமொத்த நகர​மும் ராணுவத்​தின் கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வரப்​பட்​டது.

இதனிடையே சியூட்​டாவுக்​குள் நுழைந்த அகதி​கள் உணவு தேடி அலைந்​தனர். நகரில் உள்ள பல்​வேறு கடைகள் சூறை​யாடப்​பட்​டன. அங்​குள்ள வீடு​களை சூறை​யாட​வும் அவர்​கள் முயற்சி செய்​தனர். ஆனால் ராணுவ வீரர்​கள் குவிக்​கப்​பட்​ட​தால் அகதி​களால் திருட்​டு, கொள்ளை சம்​பவங்​களில் ஈடுபட முடிய​வில்​லை.

67 பேர் உயிரிழப்பு

ஒரு நாள் முழு​வதும் உணவு கிடைக்​காத நிலை​யில் சுமார் 45,000-க்​கும் மேற்​பட்ட அகதி​கள் மீண்​டும் கடலில் நீந்தி மொராக்​கோவுக்கு திரும்பி சென்று விட்​டனர். மீத​முள்ள அகதி​களை ராணுவ வீரர்​கள் பிடித்து உள்​ளனர். அவர்​களும் மொராக்​கோவுக்கு திருப்பி அனுப்​பப்பட உள்​ளனர்.

இதனிடையே, 67 பேர் கடலில் மூழ்கி உயி​ரிழந்​துள்​ளனர். பலர் படு​கா​யங்​களு​டன் கரையேறி உள்​ளனர். அவர்​களுக்கு மனி​தாபி​மான அடிப்​படை​யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஸ்பெ​யின் ராணுவ வட்​டாரங்​கள் கூறும்​போது, “பல்​வேறு சவால்​களுக்கு இடை​யில் அகதி​கள் பிரச்​சினைக்கு சுமுக தீர்வு கண்​டுள்​ளோம். பெரும்​பாலான அகதி​கள் மொராக்​கோவுக்கு திரும்பி உள்​ளனர். மீத​முள்ள அகதி​கள் படகு​கள் வாயி​லாக மொராக்​கோவுக்கு திருப்பி அனுப்​பப்​படு​வார்​கள் என்று தெரி​வித்​தனர்​.

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுருவிய நிலையில் உணவு இல்லாமல் மீண்டும் மொராக்கோ திரும்பிய அகதிகள்
CWG 2026: குத்துச்சண்டையில் இந்தியாவின் சாக்‌ஷி, பிரியா தங்கம் வென்றனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in