CWG 2026: குத்துச்சண்டையில் இந்தியாவின் சாக்‌ஷி, பிரியா தங்கம் வென்றனர்

CWG 2026: குத்துச்சண்டையில் இந்தியாவின் சாக்‌ஷி, பிரியா தங்கம் வென்றனர்
Updated on
1 min read

கிளாஸ்கோ: நடப்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி சவுத்ரி மற்றும் பிரியா கங்காஸ் தங்கம் வென்றனர். இதுவரை இந்த தொடரில் நான்கு தங்கங்களை இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் வென்றுள்ளனர்.

இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் நடைபெற்ற 51 கிலோ எடைப்பிரிவுக்கான மகளிர் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ரூபி ஒயிட் உடன் சாக்‌ஷி விளையாடினார். 5-0 என்ற கணக்கில் ரூபியை வீழ்த்தி சாக்‌ஷி தங்கம் வென்றார்.

60 கிலோ எடைப்பிரிவுக்கான மகளிர் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் கனடாவின் மேரி பத்தூல் அல்-அஹ்மதியா உடன் பலப்பரீட்சை செய்தார் இந்தியாவின் பிரியா. இதில் 4-1 என்ற கணக்கில் தங்கம் வென்றார் பிரியா.

CWG 2026: குத்துச்சண்டையில் இந்தியாவின் சாக்‌ஷி, பிரியா தங்கம் வென்றனர்
CWG 2026: கண்ணிவெடியில் கால் இழந்த சோமன் ராணா பாரா தடகளத்தில் தங்கம் வென்று அசத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in