‘முக்கிய தலைவர்களை ஒரே நேரத்தில் கொல்ல முடியும்’ - ட்ரம்ப் கருத்துக்கு ஈரான் கண்டனம்

‘முக்கிய தலைவர்களை ஒரே நேரத்தில் கொல்ல முடியும்’ - ட்ரம்ப் கருத்துக்கு ஈரான் கண்டனம்
Updated on
1 min read

டெஹ்ரான்: ஈ​ரானின் மறைந்த உச்ச தலை​வர் அயதுல்லா அலி கமேனி​யின் இறு​திச்​சடங்​கில் கூடி​யிருந்த ஈரானிய தலைவர்களை ஒரே குண்​டில் அமெரிக்​கா​வால் கொல்ல முடி​யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசி​யதற்கு ஈரான் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக ஆர்​மீனி​யா​வில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட சமூக வலை​தளப் பக்க பதி​வில், “மனிதர்​களை வேண்டு​மா​னால் குண்டு வீசி கொல்ல முடி​யும், ஆனால் அவர்களின் மனதில் திட​மாக பதிந்​துள்ள கொள்​கைகளை ஒரு போதும் கொல்ல முடி​யாது. அமெரிக்​கா​விற்கு நாகரி​கமோ, வரலாறோ அல்​லது கண்​ணி​யமோ இல்​லை” என்று ஈரான் திட்டவட்​ட​மாகக் குறிப்​பிட்​டுள்​ளது.

கடந்த பிப்​ர​வரி 28 அன்று அமெரிக்​க-இஸ்​ரேல் கூட்டு வான்​வழித் தாக்​குதலில் ஈரானின் உச்ச தலை​வர் அயதுல்லா அலி கமேனி கொல்​லப்​பட்​டார். அவரது மறை​வைத் தொடர்ந்து ஈரானின் தலைநகர் டெஹ்​ரானில் அரசு சார்​பில் மிக பிரம்​மாண்​ட​மான இறு​திச்​சடங்கு நிகழ்​வு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் ஈரானின் தற்​போதைய முக்​கிய தலை​வர்​கள் மற்​றும் வெளிநாட்டுப் பிர​தி​நி​தி​கள் பலரும் கலந்து கொண்​டுள்​ளனர்.

இந்த இறு​திச்​சடங்கு ஊர்​வலங்​கள் குறித்து பேட்​டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “கமேனியை மக்​கள் வெறுப்​ப​தாகவே நான் நினைத்​தேன், அங்கு மக்​கள் சிந்​து​வது போலி கண்​ணீ​ராக இருக்​கலாம்” என்று விமர்​சித்​தார். மேலும், “அங்கு ஈரானின் ஒட்​டுமொத்த முக்​கிய தலை​மை​களும் கூடியுள்ளனர்.

நான் நினைத்​தால் ஒரே குண்டில் அவர்​கள் அனை​வரை​யும் வீழ்த்தி​விட முடி​யும். ஆனால், நாம் அதைச் செய்​யப் போவதில்லை; ஏனெனில், அதன் பிறகு பேச்​சு​வார்த்தை நடத்துவதற்கு அங்கே எவரும் இருக்க மாட்​டார்​கள்” என்று ட்ரம்ப் ஏளன​மாக குறிப்​பிட்​டிருந்​தார். அதற்​கு கடுமை​யான எதிர்வினையாற்​றும்​ வகை​யிலேயே ஈ​ரான்​ இவ்​​வாறு தெரிவித்துள்​ளது.

‘முக்கிய தலைவர்களை ஒரே நேரத்தில் கொல்ல முடியும்’ - ட்ரம்ப் கருத்துக்கு ஈரான் கண்டனம்
அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in