அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு

அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த சுற்று அமை​திப் பேச்​சுவார்த்தை பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் நடை​பெற வாய்ப்​புள்​ள​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட மறுத்த ஈரான் மீது அமெரிக்கா - மற்​றும் இஸ்​ரேல் இணைந்து போர் தொடுத்​தது. இந்​நிலை​யில் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்​தம் ஏற்​பட்டு அமை​திக்​கான புரிந்​துணர்வு வரைவு ஒப்​பந்​தம் கடந்த மாதம் 18-ம் தேதி ஏற்​பட்​டது. 60 நாட்​களுக்​குள் பல கட்ட பேச்​சு​வார்த்​தைகள் நடத்தி இறுதி ஒப்​பந்​தம் செய்​ய​வும் முடிவு செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில் இருதரப்பு இடையே சுவிட்​சர்​லாந்​தில் கடந்த மாதம் 21-ம் தேதி பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. அப்​போது பாகிஸ்​தான் மற்​றும் கத்​தார் பிர​தி​நி​தி​கள் நடு​வர்​களாக செயல்​பட்​டனர். இதில் நல்ல முன்​னேற்​றம் ஏற்​பட்​ட​தாகக் கூறப்​பட்​டது. தற்​போது ஈரான் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனி​யின் இறு​திச் சடங்​கு​கள் நடை​பெறு​வ​தால், அடுத்த சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெறு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. அலி கமேனி​யின் உடல் வரும் 9-ம் தேதி அடக்​கம் செய்​யப்​பட​வுள்​ளது.

அதன்​பின் 11-ம் தேதி அடுத்த சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெறலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​தப் பேச்​சு​வார்த்தை எங்கு நடை​பெறும் என இன்​னும் முடிவு செய்​யப்​பட​வில்​லை. பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத் அல்​லது சுவிட்​சர்​லாந்​தின் பர்​ஜென்​ஸ்​டாக் ரிசார்ட் ஆகிய இரு இடங்​களில் இந்​தப் பேச்​சு​வார்த்தை நடை​பெறு​வதற்​கான வாய்ப்​பு​கள் உள்ளன என தூதரக வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இந்​தப் பேச்​சு​வார்த்​தை​யின் போது ஈரானின் அணுசக்தி திட்​டம், தடைகள் விலக்​கு​வது, ஈரானின் சொத்​துக்​களை விடு​விப்​பது, ஹார்​முஸ் ஜலசந்தி பாது​காப்​பு, லெப​னானில் சண்டை நிறுத்​தத்​தைத் தொடர்​வது தொடர்​பாக ஆலோ​சிக்​கப்​படும்​ எனக்​ கூறப்​படுகிறது.

அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு
“மைலேஜ் குறைந்துவிட்டது” - E20 பெட்ரோல் கொள்கைக்கு எதிராக டெல்லியில் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in