“பயங்கரவாதிக்கு பாஸ்போர்ட் வழங்க முடியாது” - ஹசீனாவின் கோரிக்கையை நிராகரித்தது வங்கதேசம்

ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனா

கோப்புப் படம்

Updated on: 
2 min read

டாக்கா: புதிய பாஸ்போர்ட் கோரி ஷேக் ஹசீனா விண்ணப்பித்திருந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு வங்கதேசம் பாஸ்போர்ட் வழங்குவதில்லை என்று வங்கதேச வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஹுமாயூன் கபீர் தெரிவித்துள்ளார்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய ஹுமாயூன் கபீர், “ஷேக் ஹசீனா ஒரு தப்பியோடிய குற்றவாளி. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் உள்ளது. அதன் அடிப்படையில், அவரை இந்தியா எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஷேக் ஹசீனா மீதான சட்ட நடவடிக்கைகளை தொடரவும், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை நிறைவேற்றவும், அவரை நாடு கடத்த வேண்டும் என்று பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி கோரி வருகிறது.

ஷேக் ஹசீனா உண்மையிலேயே வங்கதேசத்துக்கு திரும்ப வேண்டும் என்று விரும்பினால், நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் கீழ் தன்னை வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு அவர் இந்திய அரசிடம் கோர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஹேக் ஹசீனாவுக்கு புதிய பாஸ்போர்ட் கோரி இங்கிலாந்தைச் சேர்ந்த சட்ட நிறுவனம் கடிதம் எழுதியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஹுமாயூன் கபீர், “அந்த சட்ட நிறுவனத்திடம் நான் கேட்கும் முதல் கேள்வி இதுதான். உங்கள் கிளையண்ட் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கதேச உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது, “ஹசீனா சமர்ப்பித்த விண்ணப்பங்கள் உண்மையானவையா, அவை முறையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா, அந்த ஆவணங்களைப் பெறுவதற்கு அவருக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளதா என்பது குறித்து வெளியுறவு அமைச்சகமும் சட்ட அமைச்சகமும் ஆய்வு செய்து வருகின்றன.” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, தாயகம் திரும்புவதற்கு ஏற்ப, புதிய பாஸ்போர்ட் மற்றம் தேசிய அடையாள அட்டை வழங்கக் கோரி இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு ஷேக் ஹசீனா சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இது குறித்த செய்தி நேற்று வெளியானது. ஷேக் ஹசீனா சார்பில், லண்டனைச் சேர்ந்த மேட்ரிக்ஸ் சேம்பர்ஸ் அமைப்பின் வழக்கறிஞர்கள், டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தின் பொறுப்பு ஆணையர் பிரீதி ரஹ்மானுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், “ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டையை வங்கதேசத்தில் இருந்த இடைக்கால அரசாங்கம் ரத்து செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, எங்கள் கட்சிக்காரருக்கு புதிய வங்கதேச பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டையை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஷேக் ஹசீனா வங்கதேச குடியுரிமை பெற்றவர் என்ற அடிப்படையிலும், சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளின் கீழ் உள்ள கடமைகளுக்கு இணங்கவும் இந்த கோரிக்கையை விரைவாக பரிசீலிக்குமாறு அவர்கள் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளனர்.

வங்​கதேசத்​தில் 2024-ம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால், பிரதமர் பதவியை இழந்த ஷேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். அதன் பிறகு, வங்கதேசத்தில் தேர்​தல் நடை​பெற்று பிஎன்பி கட்சி ஆட்​சிக்கு வந்​துள்​ளது. பிரதம​ராக தாரிக் ரகு​மான் உள்​ளார். மாணவர்​கள் போராட்​டம் அடக்​கு​முறை தொடர்​பான வழக்​கில், வங்​கதேசத்​தின் சர்​வ​தேச குற்​ற​வியல் தீர்ப்​பா​யம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வுக்கு மரண தண்​டனை விதித்தது. இதில் கூறப்​பட்ட குற்​றச்​சாட்​டு​களுக்கு ஷேக் ஹசீனா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

எனினும், குற்றவாளியான அவரை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பும்படி, அந்நாட்டு அரசு இந்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதி வருகிறது. வங்கதேசத்தின் கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக இந்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>ஷேக் ஹசீனா</p></div>
2026-க்கான புக்கர் பரிசை வென்றார் பிரிட்டன் எழுத்தாளர் எம்.ஜான் ஹாரிசன்

X