2026-க்கான புக்கர் பரிசை வென்றார் பிரிட்டன் எழுத்தாளர் எம்.ஜான் ஹாரிசன்

எழுத்தாளர் எம்.ஜான் ஹாரிசன்

எழுத்தாளர் எம்.ஜான் ஹாரிசன்

Updated on: 
1 min read

லண்டன்: 2026-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை ‘தி எண்ட் ஆஃப் எவரி​திங்’ என்ற நாவலுக்காக 81 வயது எழுத்தாளர் எம்.ஜான் ஹாரிசன் பெற்றுள்ளார்.

புனைவு இலக்​கியத்​துக்​கான மிக உயர்ந்த விருதுகளில் ஒன்​றாக புக்கர் பரிசு கருதப்​படு​கிறது. 2026-ம் ஆண்​டுக்​கான பரிசளிப்பு விழா லண்​டனில் உள்ள ‘ஓல்ட் பில்​லிங்ஸ்​கேட்’ அரங்​கில் திங்​கள்​கிழமை நடைபெற்றது.

இதில் 163 படைப்பாளிகள் தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர். அதிலிருந்து, எம்.ஜான் ஹாரிசனின் ‘தி எண்ட் ஆஃப் எவரி​திங்’, மார்​லன் ஜேம்​ஸின் ‘தி டிசப்​பியரர்ஸ்’, லூக் கென்னார்​டின் ‘பிளாக் பேக்’, ரெபெக்கா பெர்​ரி​யின் ‘மே வீ ஃபீட் தி கிங்’, எலிசபெத் ஸ்ட்​ரூட்​டின் ‘தி திங்ஸ் வீ நெவர் சே’, டக்​ளஸ் ஸ்டூவர்ட்​டின் ‘ஜான் ஆஃப் ஜான்’ ஆகிய ஆறு படைப்​பு​களை இறுதிப் பட்​டியலுக்​குத் தேர்ந்தெடுத்தது பண்​டைய வரலாறு மற்றும் செவ்​வியல் இலக்​கியத் துறை​யில் நிபுணத்​து​வம் பெற்ற ஆய்​வாளர் மேரி பியர்ட் தலை​மையி​லான 5 பேர் கொண்ட நடுவர் குழு.

இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் எம்.ஜான் ஹாரிசன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆருக்கு புக்கர் பரிசுடன் 50,000 பவுண்​டுகள் ரொக்​கப் பரிசும், இறுதிப் பட்​டியலில் இடம்​பெற்​றுள்ள மற்ற ஐந்து படைப்​பாளி​களுக்​கு தலா 2,500 பவுண்​டுகளும் வழங்கப்பட்டது.

புக்கர் பரிசு கடந்த 1969 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்த பரிசை வென்ற மூத்த வயது எழுத்தாளர் என்ற அடையாளத்தை எம்.ஜான் ஹாரிசன் பெற்றுள்ளார். ‘தி எண்ட் ஆஃப் எவரி​திங்’ அவர் எழுதிய 13-வது நாவல் ஆகும். பிரிட்டனை கதை களமாக கொண்டு இந்த நாவலை அவர் எழுதி உள்ளார். இதில் ஏஐ குறித்த கவலைகளை அவர் வெளிப்படுத்தி உள்ளது.

இதுவரை புக்கர் பரிசு வென்ற இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்:

1971-ல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, வி. எஸ். நைபால் (V. S. Naipaul), ‘இன் ஏ ஃப்ரீ ஸ்டேட்’ நாவலுக்காக புக்கர் பரிசு பெற்றார்.

1981-ல், இந்தியாவில் பிறந்து பின்னர் இங்கிலாந்து குடியுரிமை பெற்ற சல்மான் ருஷ்டி, ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ படத்துக்காக புக்கர் பரிசு பெற்றார்.

1997-ல், அருந்ததி ராய், ‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’, புத்தகத்துக்காக புக்கர் பரிசு பெற்றார்.

2006-ல், கிரண் தேசாய், ‘தி இன்ஹெரிட்டன்ஸ் ஆஃப் லாஸ்’ புத்தகத்துக்காக புக்கர் பரிசு பெற்றார்.

2008-ல், அரவிந்த் அடிகா, ‘தி ஒயிட் டைகர்’ நூலுக்காக புக்கர் பரிசு பெற்றார்.

<div class="paragraphs"><p>எழுத்தாளர் எம்.ஜான் ஹாரிசன்</p></div>
மனைவி அன்னாவை பிரிகிறார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

X