அதானி வழக்கு வாபஸுக்கு தொடர்பில்லை: முதலீடு திட்டம் குறித்து அமெரிக்க நீதித்துறை விளக்கம்

அதானி வழக்கு வாபஸுக்கு தொடர்பில்லை: முதலீடு திட்டம் குறித்து அமெரிக்க நீதித்துறை விளக்கம்
Updated on
1 min read

நியூயார்க்: இந்​திய தொழில​திபர் கவுதம் அதானி மற்​றும் 7 பேர் மீதான குற்​றச்​சாட்​டு​களை திரும்​பப் பெற்​றதற்​கும், அமெரிக்காவில் அதானி குழு​மத்தின் ரூ.95,000 கோடி முதலீட்​டுத் திட்​டத்​துக்கும் தொடர்​பு இல்லை என்று அமெரிக்க நீதித்துறை திட்டவட்டமாக மறுத்​துள்​ளது.

அதானி குழு​மம் மீதான ஊழல் வழக்கை வாபஸ் பெறு​வது குறித்த விரி​வான விளக்​கத்தை அளிக்​கு​மாறு அமெரிக்க ஃபெடரல் நீதி​மன்ற நீதிபதி உத்​தர​விட்​டிருந்​தார்.

அதற்​குப் பதிலளித்து அமெரிக்க முதன்மை இணை துணை அட்டர்னி ஜெனரல் ஆர். ட்ரெண்ட் மெக்​காட்​டர் நீதி​மன்​றத்​தில் அறிக்கை ஒன்​றைத் தாக்​கல் செய்​துள்​ளார். அதில், அமெரிக்​கப் பொருளா​தாரத்​தில் முதலீடு செய்வதாக அதானி குழு​மம் அளித்த வாக்குறு​தி​யின் அடிப்​படை​யிலேயே இந்த வழக்கு கைவிடப்பட்டதாக ஊடகங்​களில் வெளி​யான செய்​தி​களை அவர் முற்​றி​லும்​ நிராகரித்​தார்​.

அதானி வழக்கு வாபஸுக்கு தொடர்பில்லை: முதலீடு திட்டம் குறித்து அமெரிக்க நீதித்துறை விளக்கம்
சிறப்பு ‘டெட்’ தேர்வு கடினமாக இருந்தது: பணியில் இருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in