சிறப்பு ‘டெட்’ தேர்வு கடினமாக இருந்தது: பணியில் இருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கருத்து

தமிழகம் முழுவதும் 603 மையங்களில் 1.61 லட்சம் பேர் எழுதினர்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' 2-வது தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெறுவதை ஆய்வு செய்த மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' 2-வது தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெறுவதை ஆய்வு செய்த மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ்.

Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் பட்​ட​தாரி ஆசிரியர்​களுக்​கான சிறப்பு டெட் 2-வது தாள் தேர்வு நேற்று நடை​பெற்​றது. 1.61 லட்​சம் பேர் பங்​கேற்​றனர் இந்த தேர்​வுகடின​மாக இருந்​த​தாக பட்டதாரி ஆசிரியர்கள் தெரி​வித்​தனர்.

மத்​திய அரசின் இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் ஆசிரியர்​கள் தகு​தித் தேர்​வில் (டெட்) தேர்ச்சி பெறு​வது கட்​டா​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளது. இடைநிலை ஆசிரியர்​கள் முதல் தாளி​லும், பட்​ட​தாரி ஆசிரியர்​கள் 2-வது தாளி​லும் தேர்ச்சி பெற வேண்​டும்.

புதி​தாக ஆசிரியர் பணி​யில் சேருபவர்​கள் மட்​டுமின்​றி, ஏற்​கெனவே பணி​யில் உள்​ளவர்​களுக்​கும் டெட் தேர்ச்சி கட்​டா​யம் என உச்ச நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்​கி​யுள்​ளது. 2028-க்​குள் தேர்ச்சி பெற வேண்​டும் என காலக் கெடு​வும் நிர்​ண​யித்​துள்​ளது. பணி​யில் தொடர​வும், பதவி உயர்வு பெற​வும் டெட் தேர்​வில் தேர்ச்சி பெறு​வது அவசி​யம்.

உச்ச நீதி​மன்ற உத்​தர​வைத் தொடர்ந்​து, பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்​தது. அதன்​படி, இடைநிலை ஆசிரியர்​களுக்​கான சிறப்பு டெட் முதல் தாள் தேர்வு நேற்று முன்​தினம் (ஜூலை 4) நடத்​தப்​பட்​டது. இத்​தேர்வை 59 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் எழு​தினர். தேர்வு கடின​மாக இருந்​த​தாக பெரும்பாலான ஆசிரியர்​கள் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், பணி​யில் உள்ள பட்​ட​தாரி ஆசிரியர்​களுக்​கான சிறப்பு டெட் 2-வது தாள் தேர்வு நேற்று நடை​பெற்​றது. சென்​னை​யில் 38 மையங்​கள் உட்பட தமிழகம் முழு​வதும் 603 மையங்​களில் தேர்வு நடந்​தது.

95.95 சதவீதம் பேர் வருகை: ‘2-வது தாள் தேர்வை எழுத 1.68 லட்​சம் பேர் அனு​ம​திக்​கப்​பட்ட நிலை​யில், 1.61 லட்​சம் பேர் தேர்வு எழு​தி​யுள்​ளனர். வரு​கைப்பதிவு 95.95 சதவீதம். அனைத்து மையங்​களி​லும் தேர்வு சுமுக​மாக, வெளிப்​படைத் தன்​மை​யுடன் நடந்​தது’ என்று ஆசிரியர் தேர்வு வாரி​யத் தலை​வர் ஜெயந்தி தெரி​வித்​துள்​ளார்.

இதற்​கிடையே, சிறப்பு டெட் 2-வது தாள் தேர்​வில் தமிழ், ஆங்​கிலம், கல்வி உளவியல் ஆகிய பகு​தி​களில் வினாக்​கள் மிக​வும் கடின​மாக இருந்​த​தாக தேர்வு எழு​திய ஆசிரியர்​கள் கூறினர். டெட் தேர்​வில் தேர்ச்சி பெற பொதுப் பிரி​வினர் 150-க்கு 90 மதிப்​பெண்​ணும், பிசி, பிசி-​முஸ்​லிம், எம்​பிசி, டிஎன்​சி, மாற்​றுத் திற​னாளி​கள் 75 மதிப்​பெண்​ணும், எஸ்​சி, எஸ்​டி, எஸ்​சி-அருந்​த​தி​யர் 60 மதிப்​பெண்​ணும் பெற வேண்​டும்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' 2-வது தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெறுவதை ஆய்வு செய்த மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ்.</p></div>
ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in