Published : 12 May 2017 09:15 AM
Last Updated : 12 May 2017 09:15 AM

அமெரிக்க அதிபருடன் ரஷ்ய அமைச்சர் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவ் வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார்.

அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டி வந்தார். ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். எனினும் சிரியா மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவ், அதிபர் டொனால்டு ட்ரம்பை வாஷிங்டனில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கவில்லை. பேச்சு வார்த்தை விவரங்களும் வெளி யிடப்படவில்லை.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனையும் அமைச்சர் செர்ஜி லாரவ் சந்தித்துப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x