Last Updated : 23 Dec, 2016 08:39 PM

 

Published : 23 Dec 2016 08:39 PM
Last Updated : 23 Dec 2016 08:39 PM

லிபிய விமானம் கடத்தல்: பயணிகள் விடுவிப்பு

லிபிய விமானத்தை 118 பயணிகளுடன் கடத்திச் சென்ற கடத்தல்காரர்கள், திடீர்த் திருப்பமாக கையெறி குண்டுகள் மூலம் விமானத்தை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். அதே சமயம் பயணிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிபியாவின் அப்ரிகியா ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏ320 ஏர்பஸ் வகையைச் சேர்ந்த விமானம் நேற்று ஒயாசிஸ் நகரத்தில் இருந்து 118 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் திரிபோலிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தை கடத்தல்காரர்கள் மால்டாவுக்கு கடத்திச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து பயணிகளை மீட்க லிபியா அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் பயணிகள் அனைவரையும் விடுவிப்பதாக கடத்தல்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களது கோரிக்கை என்னவென்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் அரசிடம் பேசிய கடத்தல்காரர்களில் ஒருவர் கடாஃபி கட்சி ஆதரவு தலைவன் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே பயணிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. எனினும் ஒருசிலரை மட்டும் பிணையக் கைதிகளாக கடத்தல்காரர்கள் பிடித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் விமானத்தை கையெறி குண்டுகள் மூலம் தகர்க்கப்போவதாக கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x