Published : 02 Nov 2022 02:23 PM
Last Updated : 02 Nov 2022 02:23 PM

ஆண்டுக்கு 10 மில்லியன் துண்டுகள் நுண் ஞெகிழிகளை உட்கொள்ளும் நீல திமிங்கலங்கள்: ஆய்வில் தகவல்

நீல திமிங்கலம் | கோப்புப் படம்

நீல திமிங்கலங்கள் வருடத்திற்கு 10 மில்லியன் துண்டுகள் நுண் ஞெகிழி கழிவுகளை உட்கொள்வதாக விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய கடல் வாழ் உயிரினங்களான நீல திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு டன் கணக்கில் உணவை உண்ணும் தன்மை கொண்டவை. ஆனால் சமீப ஆண்டுகளாக கடல் வாழ் உயிரினங்கள் ஞெகிழி கழிவுகளை உண்ணுவது அதிகரித்து வருகிறது. இந்தப் பட்டியலில் நீல திமிங்கலங்கள்தான் முதல் இடத்தில் இருப்பதாக பசுபிக் கடலில் ஆய்வு மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க பசிபிக் கடற்கரையில் நீல திமிங்கலங்கள் உட்கொண்ட நுண் ஞெகிழி அளவை ஆராய்ச்சியாளர்கள் செவ்வாயன்று சமர்ப்பித்தனர். இந்த உணவுமுறை கடல் வாழ் உயிரினங்களின் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அமெரிக்க பல்கலைகழக விஞ்ஞானிகள் அறிக்கையில், “ஆய்வின்படி, நீல திமிங்கலங்கள் தினமும் சுமார் 10 மில்லியன் நுண் ஞெகிழி கழிவுகளை விழுங்கக்கூடும். இதற்கெல்லாம் முக்கிய காரணம் அமெரிக்க கடற்கரையின் மாசடைந்த நீரே. இந்த புதிய உணவு முறைகளால் திமிங்கலங்கள் உடல் பரிமாணத்தில் எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படலாம். மேலும் ஆரோக்கிய ரீதியில் அவை பாதிப்பை சந்திக்கின்றன. மேலும் உடலில் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியிடும் வேதியியல் கழிவுகள் திமிங்கலங்களில் உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கலாம்” என்றார்.

ஞெகிழி கழிவே இன்றைய தேதியில் உலகின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. ஞெகிழி கழிவுகளிலிருந்து கடலையும், அதில் வாழும் உயிரினங்களையும், அவற்றை உண்ணும் நம்மையும் மீட்டெடுத்துக் காக்கும் விதமாகப் பல முன்னெடுப்புகளை சூழலியல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஞெகிழியிடமிருந்து இந்த உலகத்தை காக்கும் உலக நாடுகளின் நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்து வருகின்றன. அதேவேளையில் நுண் ஞெகிழி கழிவுகளை அழிப்பதில் அறிவியல் ரீதியாக விஞ்ஞானிகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் நம்பிக்கை அளித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x