Published : 22 May 2016 09:23 AM
Last Updated : 22 May 2016 09:23 AM

தமிழகம், ஆந்திரத்தை அச்சுறுத்திய ரோனு புயல் வங்கதேசத்தில் கரை கடந்தது: 20 பேர் பலி, 100 பேர் படுகாயம்

வங்கதேசத்தின் தெற்கு கடலோர பகுதியில் நேற்று கரையை கடந்த ரோனு புயலுக்கு 20 பேர் பலியாகினர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ரோனு புயல் இலங்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய பின் சென்னை அருகே மையம் கொண்டது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது. பின்னர் இந்தப் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர மாவட்டங்களில் கனமழையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரோனு புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தின் பாரிசால் - சிட்டகாங் பகுதியில் நேற்று மதியம் மணிக்கு 62 - 88 கி.மீ. வேகத்தில் கரையை கடந்தது. வங்கதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களிலும் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது.

இந்நிலையில் சிட்டகாங் மாவட்டம், சிட்டகுண்டு என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் வீட்டுடன் புதையுண்டனர். போலா தீவின், தாஜ்முதின் நகரில் இருவரும், பதுவகாலி என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்து ஒரு பெண்ணும் இறந்தனர். இதுதவிர புயல், மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் 15 பேர் இறந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

மெகனா நதியில் மணல் ஏற்றி வந்த சரக்கு கப்பல் கவிழ்ந்ததில் 4 பேரை காணவில்லை.

தெற்கு வங்கதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக் கணக்கான மரங்கள், மின்கம் பங்கள் சாய்ந்தன. முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக 5 லட்சத்துக்கும் மேற்பட் டோர் அப்புறப்படுத்தப்பட்டு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக வங்கதேச பேரிடர் மேலாண்மைத் துறை தெரி வித்தது. கடல் மற்றும் ஆற்று துறைமுகங்களை மூட உத்தர விட்ட அதிகாரிகள், மீன்பிடி படகுகள் கடலுக்குச் செல்லவும் தடை விதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x