Last Updated : 10 May, 2016 12:12 PM

 

Published : 10 May 2016 12:12 PM
Last Updated : 10 May 2016 12:12 PM

லண்டன் மேயர் சாதிக் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிப்பேன்: டிரம்ப்

லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாதிக் கானுக்கு விலக்கு அளித்து அவர் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுவார் என அந்நாட்டின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்களுள் ஒருவரான டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், "லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக சாதிக் கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் நல்ல விஷயம். எனக்கு அதில் மகிழ்ச்சி. அவர் தனது பொறுப்புகளை நல்ல முறையில் செய்வார் என எதிர்பார்க்கிறேன். மற்றவர்களுக்கு அவர் ஒரு சிறந்த முன்னதாரணமாக இருப்பார் என நினைக்கிறேன்.

அமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படும் என நான் கூறியிருந்தாலும் லண்டன் மேயருக்கு மட்டும் விலக்கு அளிப்பேன். எல்லா விஷயங்களிலும் விதிவிலக்கு இருக்கும்தானே. அப்படித்தான் லண்டன் மேயருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிப்பதும்" என்றார்.

டிரம்ப் மீது விமர்சனம்:

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த டொனால்டு டிரம்ப், "கன்சர்வேடிவ் கட்சியினர் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்ச உணர்வை விதைத்து அதில் அரசியல் ஆதாயம் தேட முயன்றனர். எப்படி அமெரிக்காவில் டிரம்ப் முஸ்லிம்களை விமர்சிக்கிறாரோ அதே பாணியில் அரசியல் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் பிரச்சாரம் எடுபடவில்லை" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் டிரம்ப், லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாதிக் கானுக்கு விலக்கு அளித்து அவர் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுவார் எனக் கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x