Published : 20 Apr 2016 09:58 AM
Last Updated : 20 Apr 2016 09:58 AM

ராஜபக்சவுக்கு கல்லீரல் பாதிப்பு

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கடந்த 2005 முதல் 2015 வரை ராஜபக்ச அதிபராக பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது.

கடந்த 2009-ல் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் கடந்த ஆண்டு ஜனவரியில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அவர் படுதோல்வி அடைந்தார்.

தற்போது அவர் மீதும் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில் மகிந்த ராஜபக்சவுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு உடல்நலம் மோசமடைந்திருப்பதாக சிங்கள இணையதளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ராஜபக்ச மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கல்லீரலுக்கு மேலும் பாதிப்பு ஏற்படலாம் என்று டாக்டர்கள் எச்சரித்திருப்பதாக அந்த இணையதளம் தெரிவித் துள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x