Last Updated : 20 Apr, 2016 02:10 PM

 

Published : 20 Apr 2016 02:10 PM
Last Updated : 20 Apr 2016 02:10 PM

ஜப்பான் இரட்டை பூகம்ப பலி எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு

கடந்த வாரம் தெற்கு ஜப்பானில் ஏற்பட்ட இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் பலியானோர் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.

குமாமோட்டோ பகுதியில் வீடுகளை விட்டு வெளியேறியதால் ஏற்பட்ட உடல்/மன ரீதியான அழுத்தம் காரணமாக மேலும் 11 பேர் உயிரிழந்ததாக குமாமாண்டோ போலீஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இரட்டை நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட ஏகப்பட்ட பின் அதிர்வுகளினால் அச்சமடைந்து சுமார் 1 லட்சம் பேர் வீடுகளை விட்டு முகாம்களில் இருந்து வருகின்றனர். சிலர் கார்களிலேயே வாழ்க்கை நடத்தி வருவதாகவும் இவர்கள் உணவு, குடிநீர் இல்லாமல் அவதியுற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழன் இரவு 6.5 என்ற ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கமும் இதனைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று 7.3 என்ற ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கமும் ஏற்பட்டதையடுத்து தெற்கு ஜப்பான் நிலைகுலைந்துள்ளது.

இதில் 2-வது பூகம்பத்தினால் மலைகிராமமான மினாமியாசோவில் நிலச்சரிவு ஏற்பட்டு அதன் சரிவுண்ட நிலப்பகுதி கட்டிடங்களிலும் சாலைகளிலும் தாறுமாறாக கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலச்சரிவுக்கு இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர்.

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மஷிகோவில் 20 பேர் பலியாகியுள்ளனர். குமாமோட்டோவில் இதுவரை சுமார் 1453 வீடுகளும் மஷிகோவில் 1026 வீடுகளும் முழுதும் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x