Published : 10 Apr 2016 01:02 PM
Last Updated : 10 Apr 2016 01:02 PM

மீண்டும் பயன்படுத்தும் வகையில் விண்வெளியிலிருந்து ராக்கெட் வெற்றிகரமாக தரையிறங்கியது: அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய சாதனை

விண்ணில் பாய்ந்த ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தும் வகையில் அதை வெற்றிகரமாக கடலில் விழச் செய்து அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா வில் உள்ள கேப் கனாவெரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 என்ற அந்த ராக்கெட் ஏவப் பட்டது. சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்காக அந்த ராக்கெட்டுடன் விண்வெளி ஓடமும் இணைக்கப்பட்டது.

ஏற்கெனவே 4 முறை விண்ணில் ஏவப்பட்ட பால்கான் 9 ராக்கெட் தோல்வி அடைந்த நிலையில், தற்போது ஏவப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத் தப்பட்டதால் நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், மீண்டும் பயன்படுத்த தக்க வகையில் ராக்கெட்டுடன் இணைக் கப்பட்ட பூஸ்டர் என்ற பாகமும், வெற்றிகரமாக கடலில் விழுந் துள்ளது. இந்த பூஸ்டர் அடுத்த முறை ராக்கெட் ஏவும்போது பயன் படுத்தப்படவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதன் மூலம் பூஸ்டர் உருவாக்கு வதற்கான செலவுகளும் குறையும் என கூறப்படுகிறது.

இந்த ராக்கெட்டில் விண்வெளி வீரர்களுக்கு தேவையான 3,175 கிலோ எடை கொண்ட பொருட் களுடன், Bigelow Expandable Activity Module (BEAM) என்ற மருத்துவ ஆய்வு கூடம் கொண்ட தொகுதியும் எடுத்துச் செல்லப் பட்டுள்ளது. இந்த தனித் தொகுதி சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துடன் 5 நாட்களுக்கு பின் இணைக்கப்படும். 10 அடி விட்டமும், 13 அடி நீளமும் கொண்ட இந்த ‘பீம்’ தொகுதியில் சென்சார் டேட்டா உள்ளிட்ட நவீன மருத்துவ கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச விண் வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் விண்வெளி வீரர்கள், இந்த தொகுதிக்குள் சென்று தங்களது உடல்நலனை ஆய்வு செய்து கொள்ளலாம். பொதுவாக விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கி இருக்கும் வீரர்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவு நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் குறித்தும், எந்த அளவுக்கு எலும்பின் அடர்த்தி குறைந்துள்ளது என்ற விவரங்களையும் இந்த தொகுதிக்குள் சென்று ஆய்வு செய்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் சூரிய கதிர்வீச்சு, விண்வெளி கழிவுகள் ஆகியவற் றில் இருந்தும் விண்வெளி வீரர்களை இந்த ‘பீம்’ தொகுதி பாதுகாக்கும் வகையில் வடிவ மைக்கப்பட்டுள்ளது. இந்த ‘பீம்’ தொகுதியில் மேற்கொள்ளப்படும் உடல்நல ஆய்வுகள் பதிவு செய்யப்பட்டு, பின்னர் பூமிக்கு அப்படியே எடுத்து வரப்படும். அதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களுக்கு தேவை யான மருத்துவ வசதிகளை செய்து தர முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x