Last Updated : 11 Mar, 2016 10:51 AM

 

Published : 11 Mar 2016 10:51 AM
Last Updated : 11 Mar 2016 10:51 AM

தென்கொரியாவின் பொருளாதாரத் தடைக்கு பதிலடி: ஏவுகணைகளை வீசி வடகொரியா அச்சுறுத்தல்

தென்கொரியாவின் பொருளா தாரத் தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா நேற்று குறுகிய தூர இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை கடல் பகுதியில் வீசியது.

வடகொரியா கடந்த ஜனவரி மாதம் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை நடத்தியது. இதை யடுத்து இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்தது.

நீண்டதூர இலக்கைத் தாக்கும் ஏவுகணையை வடகொரியா பரிசோதித்ததைத் தொடர்ந்து, கேசாங் கூட்டு தொழில் பூங்காவை தென் கொரியா நிறுத்தியது. மேலும், வட கொரியா மீது பொருளாதாரத் தடையையும் விதித்தது.

ஐ.நா.வும் பொருளாதாரத் தடை விதித்தது. இதனால் தென் கொரியா, அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப் போவ தாக வடகொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், நேற்று இரு குறுகிய தூர ஏவுகணைகளை கடல் பகுதியில் வீசி வடகொரியா தன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. மேலும், வடகொரியாவின் கேசாங் நகரில் இரு நாடுகளின் கூட்டுப்பங்களிப்பில் செயல்பட்டு வரும் தொழில் பூங்காவில் உள்ள தென்கொரியாவுக்கு சொந்தமான சொத்துகளை அழிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தவிர டயமன்ட் மவுன்டெய்ன் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியையும் சேதப்படுத்தப் போவதாக அமைதி ஒருங்கிணைப் புக்கான வடகொரிய குழு தெரிவித்துள்ளது.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைக்கு அருகே வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் நிற்பது போன்ற புகைப்படம் புதன்கிழமை வெளியானது. அடுத்த நாளே இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.

இதனிடையே வடகொரியா வுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகை யில் கடல் மற்றும் நிலப்பரப்பில் தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து தீவிர போர் ஒத்திகை யில் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து தென்கொரிய ராணுவ வட்டாரங்கள் கூறிய போது, வடகொரியாவின் அணுசக்தி மையங்களை அழிக்க ஏதுவாக இந்த போர் ஒத்திகையை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x