Last Updated : 08 Mar, 2016 10:48 AM

 

Published : 08 Mar 2016 10:48 AM
Last Updated : 08 Mar 2016 10:48 AM

அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஹிலாரி, டிரம்ப்புக்கு பின்னடைவு

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியில் முன்னணியில் இருக்கும் ஹிலாரிக் கும், குடியரசுக் கட்சியில் முன் னணியில் இருக்கும் டொனால்டு டிரம்புக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மெய்னி பகுதியில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில், ஹிலாரியை விட சக போட்டியாளர் பெர்னி சாண்டர்ஸ் முந்தினார். இங்கு சாண்டர்ஸுக்கு 64.3 சதவீத வாக்குகளும், ஹிலாரிக்கு 35.5 சதவீத வாக்குளும் கிடைத்தன. இருப்பினும் ஒட்டுமொத்தமாக ஹிலாரி அதிகபட்ச முன்னிலை பெற்றுள்ளார்.

அதேபோன்று, குடியரசுக் கட்சியில், பார்டெ ரிக்கவ் பகுதியில் ருபிடோ 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். அக்கட்சியின் முன்னணி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்புக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக டிரம்ப் வலுவான நிலையில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x