Last Updated : 09 Feb, 2016 02:56 PM

 

Published : 09 Feb 2016 02:56 PM
Last Updated : 09 Feb 2016 02:56 PM

ஜெர்மனி ரயில் விபத்தில் 8 பேர் பலி, 100 பேர் காயம்

தெற்கு ஜெர்மனியில் 2 பயணிகள் ரயில் நேற்று மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் இறந்தனர். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர்.

முனிச் நகரில் இருந்து தென் கிழக்கே சுமார் 60 கி.மீ. தொலை வில், பேட் ஏப்ளிங் என்ற இடத் துக்கு அருகில் வனப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இதுகுறித்து பிராந்திய ரயில் நிறுவனமான மெரிடியன் விடுத்துள்ள அறிக்கையில், “ரோஸனீம் - ஹோல்ஸ்கிர்சென் இடையிலான ஒற்றைப் பாதையில் காலை 7 மணியளவில் இந்த விபத்து நேரிட்டது” என்று கூறியுள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

விபத்தைத் தொடர்ந்து பல பெட்டிகள் கவிழ்ந்தன. சேதமடைந்த பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர். மீட்புப் பணியில் 10-க்கும் மேற்பட்ட ஹெலிகாப் டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.

விபத்தில் காயமடைந்த 100 பேரில் 65 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 15 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜெர்மனியில் கடந்த ஆண்டு 2012, ஏப்ரல் மாதம் நடந்த ரயில் விபத்தில் 3 பேர் இறந்தனர். 13 பேர் காயம் அடைந்தனர். அதற்கு பிறகு நடந்த மோசமான ரயில் விபத்து இதுவென்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x