Last Updated : 02 Dec, 2015 11:00 AM

 

Published : 02 Dec 2015 11:00 AM
Last Updated : 02 Dec 2015 11:00 AM

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஆதரவு: யுஏஇ அறிவிப்பு

தீவிரவாதம், பயங்கரவாதத்தால் எந்த நாடு பாதிக்கப்பட்டிருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு ஆதரவாக இருப் போம் என ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் 44-வது தேசிய தினம் இன்று கொண் டாடப்பட உள்ளது. இந்நிலையில் அந்நாட்டு அரசு சார்பில் வெளி யிடப்பட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப் பாட்டை தெரிவித்துள்ளது.

பாரீஸில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நட்பு நாடு என்ற அடிப்படையில் பிரான் ஸுக்கு ஆதரவாக இருப்போம் என்பதை அதிபர் ஷேக் கலிபா பின் ஸயத் அல் நஹ்யான் உறுதி செய்துள்ளார்.

தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் அமீரகம் எதிர்க்கிறது. தீவிரவாதத் துக்கு எதிராக சர்வதேச அளவில் இணைந்து செயல்பட அமீரகம் தயாராக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x