Last Updated : 19 Nov, 2015 10:02 AM

 

Published : 19 Nov 2015 10:02 AM
Last Updated : 19 Nov 2015 10:02 AM

தமிழகத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சோழர் காலத்து சிலைகள் மீட்பு: அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை

தமிழகத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட, ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் காலத்து சிவன் மற்றும் பார்வதி வெண்கல சிலைகளை இண்டியானா அருங்காட்சியகத்தில் இருந்து அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த சுபாஷ் கபூர் என்பவர் அமெரிக்கா உள் ளிட்ட உலகநாடுகளில் சிலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்கும் சர்வதேச வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர். கடந்த 2004ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ‘கடந்தகால கலை’ என்ற பெயரிலான கண் காட்சியில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன், பார்வதி வெண்கல சிலைகளை காட்சிக் காகவும், விற்பனைக்காகவும் வைத்திருந்தார்.

இண்டியானா மாகாணத்தில் உள்ள பால் பல்கலைக்கழகத்தின் டேவிட் ஆவ்ஸ்லே அருங்காட்சி யகம் சார்பில் அந்த சிலை வாங்கப்பட்டது. பின்னர், 2005ம் ஆண்டில் தான் பொய்யான தகவல்கள் அளித்து, சுபாஷ் கபூர் அந்த சிலைகளை விற்பனை செய்திருப்பது அம்பலமானது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை விசாரித்த அமெரிக் காவின் குடியுரிமை மற்றும் அமலாக்கத் துறை அந்த சிலை தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பதை கண்டு பிடித்தது. அத்துடன் அவை இரண்டும் ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய சோழர் காலத்து சிலை என்பதும் தெரியவந்தது. தவிர, இதே போல், 2,500க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் கை வினைப்பொருட்களை பல்வேறு நாடுகளில் இருந்து திருடி வந்து சுபாஷ் கபூர் விற்பனை செய்திருப்பதும் ஊர்ஜித மானது.

இதையடுத்து, அந்த சிலையை, பால் மாகாண பல்கலைக்கழகம் அமெரிக்காவின் அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத் துள்ளது. சிலை கடத்தல் விவகாரத்தில் இந்திய அதிகாரிகள் சுபாஷ் கபூரை கைது செய்து டில்லியில் தங்களது பாதுகாப்பில் வைத்திருப்பதாக கூறப்படு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x