Published : 10 Oct 2015 09:48 AM
Last Updated : 10 Oct 2015 09:48 AM

விண்வெளி வீரர்களுக்காக கன்டெய்னர் வடிவமைப்பு: நாசா போட்டிக்கு 2 இந்தியர்கள் தேர்வு

நாசா நடத்திய ‘3 டி கன்டெய்னர் வடிவமைக்கும் போட்டி’யில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் இறுதிக் கட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

விண்வெளியில் வீரர்கள் பயன் படுத்தும் வகையில் கன்டெய்னர் வடிவமைக்கும் (3-டி ஸ்பேஸ் கன்டெய்னர் சேலஞ்ச்) போட்டியை, அமெரிக்க விண் வெளி ஆய்வு நிறுவனமான நாசா நடத்தியது. இதில் அமெரிக்கா வைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். 10 பேர் மட்டும் இறுதிக் கட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

இந்தப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள், 3-டி மாடலிங் சாப்ட்வேர் மூலம் பல்வேறு வடிவங்களில் கன்டெய்னர்களை (சரக்கு பெட்டகம்) வடிவமைத் துள்ளனர்.

இதுகுறித்து நாசாவின் விண் வெளி தயாரிப்பு திட்ட மேலாளர் நிக்கி வெர்ஹீசர் கூறியிருப் பதாவது:

பூமியில் நமக்கு சாதாரணமாக தெரியும் விஷயங்கள் கூட, விண்வெளியில் மிகப் பெரிய சவா லாக இருக்கும். ஏன் அபாயகரமானதாக கூட இருக்கும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மட்டும் விண்வெளி பயணத்துக்கு உதவாது. விண் வெளி வீரர்களின் பயணத்தை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும். அதற்கு விண் வெளி வீரர்களுக்கு தேவைப் படும் உணவுப் பொருட்கள், விண் வெளியில் சேகரிக்கும் பொருட் களை பத்திரமாக வைத்திருக்க என பல வகைகளில் கன்டெய்னர்கள் தேவைப்படுகின்றன.

இவ்வாறு நிக்கி வெர்ஹீசர் கூறினார்.

இதுகுறித்து நாசா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கப் பட்டுள்ளது. அங்கு போதிய இடம் இல்லை. மேலும், புவி ஈர்ப்பு விசை இல்லாததால் பொருட்கள் வெளியில் பறந்து சென்றுவிடும் நிலை உள்ளது. எனவே, ஆய்வு மையத்துக்குள் இடத்தை அடைக் காத வகையில் கன்டெய்னர்களை வடிவமைப்பதுதான் நாசாவின் நோக்கம். அதன்மூலம் விண்வெளி யில் வீரர்களின் வாழ்க்கையை சிரமம் இல்லாமல் மாற்ற முடியும். அந்தப் போட்டியில் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இறுதியாக 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அரிசோனாவை சேர்ந்த ராஜன் விவேக், டெலாவேர் பகுதியை சேர்ந்த பிரசன்னா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இந்திய அமெரிக்கர்கள் 2 பேர் அடங்குவர். ‘ஹைட்ரோபோனிக் பிளான்ட் பாக்ஸ் கன்டெய்னரை’ ராஜன் வடிவமைத்துள்ளார். இந்த வகை கன்டெய்னரில் தண்ணீர் நிரப்பவும், மண் இல்லாமல் தாவரங்களை வளர்க்கவும் முடியும். இந்த கன்டெய்னரில் தாவரங்கள் விரைவாகவும் வலிமையாகவும் வளரும்.

மடக்கி வைத்துக் கொள்ளும் வகையில் புதிய கன்டெய்னரை பிரசன்னா வடிவமைத்துள்ளார். இவர் வடிவமைத்துள்ள கன்டெய்னரை தேவைக்கேற்ப பெரிதாக்கி கொள்ளவும், மடக்கி வைத்து கொள்ளவும் முடியும். விண்வெளி ஆய்வு மையத்தில் போதிய இடம் இல்லாத சூழ்நிலையில், இந்த கன்டெய்னர் பெரும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி ஆய்வுமையத்துக்குள் இடத்தை அடைக்காத வகையில் கன்டெய்னர்களை வடிவமைப்பதுதான் நாசாவின் நோக்கம். அதன்மூலம் விண்வெளியில் வீரர்களின் வாழ்க்கையை சிரமம் இல்லாமல் மாற்ற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x