Published : 19 Dec 2020 16:09 pm

Updated : 19 Dec 2020 16:09 pm

 

Published : 19 Dec 2020 04:09 PM
Last Updated : 19 Dec 2020 04:09 PM

ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 28 லட்சத்தைக் கடந்தது

russia-corona-update

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,209 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,209 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தைக் கடந்துள்ளது. ரஷ்யாவில் கரோனாவுக்கு இதுவரை 50,000 பேர்வரை பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரஷ்யாவில் கரோனா தொற்று தீவிரமாக உள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில், கரோனா தடுப்பு மருந்தை விரைவில் பெற்றுக்கொள்வேன் என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு மருந்து

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு கடந்த மாதம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளது.

தவறவிடாதீர்!



RussiaCoronaCorona virusOne minute newsVaccineகரோனா தடுப்பு மருந்துகரோனா வைரஸ்ரஷ்யா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x