Published : 07 Nov 2020 03:36 PM
Last Updated : 07 Nov 2020 03:36 PM

ஒரே நாளில் பிரேசிலில் 18,862 பேர் பாதிப்பு

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 18,862 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரேசிலில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 18,862 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பிரேசிலில் 56,31,181 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 279 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை சுமார் 1,62,015 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கரோனாவுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

பிரேசிலில் பிப்ரவரி மாதம் முதல் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கரோனா வைரஸ் பரவலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா பரவத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x