Last Updated : 24 Oct, 2015 09:59 AM

 

Published : 24 Oct 2015 09:59 AM
Last Updated : 24 Oct 2015 09:59 AM

பாகிஸ்தான் புதிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்

பாகிஸ்தானின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் நாசர் கான் ஜன்ஜுவா நியமிக் கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை ஆலோசகராக சர்தாஜ் அஜீஸ் பதவி வகித்து வந்தார். இவர் தனது பதவியில் நிதானப்போக்குடன் செயல்பட்டு வந்தார். இந்நிலை யில் இவரிடம் இருந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பு ஜன்ஜுவாவுக்கு வழங்கப்பட் டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களிலும் இந்திய விவகாரத்திலும் ராணுவத் தின் பிடி இறுகி இருக்கிறது.

ஜன்ஜுவா நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு அமைச்சர் பதவிக்கு இணையான அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ் தானுடனான பாதுகாப்பு உறவுக ளில் கவனம் செலுத்துவதே ஜன்ஜு வாவின் உடனடிப் பணியாக இருக்கும்.

உஃபா பிரகடனத்தின் கீழ் இந்தியா பாகிஸ்தான் இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றால் அதற்கு ஜன்ஜுவா தலைமை வகிப்பார்.

இதனிடையே சர்தாஜ் அஜீஸ் (86) வசம் தற்போது வெளியுறவுத் துறை மட்டுமே இருப்பதால் அவர் அந்தப் பொறுப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x