Last Updated : 09 Sep, 2015 08:22 AM

 

Published : 09 Sep 2015 08:22 AM
Last Updated : 09 Sep 2015 08:22 AM

போர்ப்ஸ் இதழ் வெளியிடு: ஆசியாவின் நன்கொடையாளர் பட்டியலில் 7 இந்தியர் - 4 பேர் இன்போசிஸ் நிறுவனர்கள்

போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள ஆசியாவின் நன்கொடையாளர்கள் பட்டியலில் 7 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் 4 பேர் இன்போசிஸ் நிறுவனர்கள் ஆவர்.

இந்தப் பட்டியலில் கேரளாவில் பிறந்த தொழில்முனைவோரான சன்னி வர்கி முதலிடத்தில் உள்ளார். துபாயில் வசித்து வரும் இவர், ஜெம்ஸ் கல்விக் குழுமத்தின் நிறு வனர் ஆவார். இந்தக் குழுமம் 14 நாடுகளில் 70 பள்ளிகளை நடத்தி வருகிறது.

கோடீஸ்வரர்கள் தங்கள் வரு மானத்தில் பாதியை அறக் கட்ட ளைகளுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என்று பில் கேட்ஸ் மற்றும் வாரன் பப்பெட் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, வர்கி தனது வரு மானத்தின் பாதி தொகையான ரூ.15,075 கோடியை கடந்த ஜூன் மாதம் அறக்கட்டளைக்கு நன் கொடையாக வழங்கினார்.

நம் நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன் போசிஸ் இணை நிறுவனர்களான சேனாபதி கோபாலகிருஷ்ணன், நந்தன் நிலகேணி மற்றும் எஸ்.டி.ஷிபுலால் ஆகியோர் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு நன்கொடை வழங்கிய தனி நபர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இன்போசிஸ் நிறுவனத்தின் மற் றொரு நிறுவனரான என்.ஆர்.நாரா யணமூர்த்தியின் மகன் ரோஹனும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர், பழங்கால இந்திய இலக்கியங்களை பிரபலப் படுத்துவதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு ரூ.34.84 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளார். மேலும் லண்டனில் வசித்துவரும் இந்திய சகோதரர் களான சுரேஷ் ராமகிருஷ் ணன் மற்றும் மகேஷ் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித் துள்ளனர். இந்தியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்களுக்கு தையல் பயிற்சி வழங்குவதற்காக ரூ.20 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளனர். இவர்கள் லண்டனின் சவில்லே ரே பகுதியில் செயல்பட்டு வரும் விட்காம்ப் மற்றும் ஷாப்ட்ஸ்பரி டெய்லர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x