Last Updated : 30 Apr, 2020 09:11 AM

 

Published : 30 Apr 2020 09:11 AM
Last Updated : 30 Apr 2020 09:11 AM

கரோனாவால் உலகளவில் 160 கோடி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம்: உலக தொழிலாளர் அமைப்பு கவலை

கோப்புப்படம்

நியூயார்க்

பேரழிவுகளைத் தரும் கரோனா வைரஸின் கோரப்படியால், தொழிற்சாலை தொடர்ந்து மூடியிருப்பது, வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமை, வேலையிழப்பு போன்றவற்றால் உலகளவில் தொழிலாளர்களில் ஏறக்குறைய பாதியளவு அல்லது 160 கோடி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு(ஐஎல்ஓ) கவலைத் தெரிவித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு கரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார, வேலையிழப்பு குறித்த தனது மூன்றாவது கட்ட அறிக்கையை நேற்று வெளியிட்டது அது குறித்து அந்த அமைப்பின் தலைவர் கெய் ரைடர் கூறியதாவது:

கரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக உலகளழில் 43 கோடி சில்லரை வர்த்தகங்கள், உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தீவிரமான பாதிப்பை அடையும். உலகளவில் 330 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.

இதில் 200 கோடி தொழிலாளர்கள் அமைப்பு சாரா துறையில் இருக்கிறார்கள். பொருளாதாரத்தின் அச்சாணியாகத் திகழும் இந்த தொழிலாளர்கள்தான் கரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்

அமைப்பு சாரா துறையில் இருக்கும் 160 கோடி தொழிலாளர்கள், அதாவது உலகத் தொழிலாளர்கள் வர்்க்கத்தில் ஏறக்குறைய பாதிப்பேர் கரோனா வைரஸின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் ஆபத்தான சூழல் இருக்கிறது. இவர்கள் கடினமாக உழைத்து வருமானம் ஈட்டுவதில் பெரும் சவால்களைச்சந்திப்பார்கள்.கரோனா வைரஸ் பாதித்த முதல் மாதத்திலேயே இந்த தொழிலாளர்களில் 60சதவீதம் பேர் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள்

அதாவது அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் இ்ந்த தொழிலாளர்கள் 80 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டனர், ஐரோப்பா, மத்திய ஆசியாவில் 70 சதவீதம், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் 21.6 சதவீதமாகக் குறைந்துவிட்டனர் .

கரோன வைரஸால் வேலையிழப்பு பிரச்சினை நிலவினாலும், உலகின் பொருளாதாரச் சக்கரம் சுழல்வதற்கு முக்கியக்காரணமாக இருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வேலையையும், வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வருமானம் இல்லை என்றால் அவர்களுக்கு உணவு கிடைக்காது, சமூகப் பாதுகாப்பு இருக்காது, எதிர்காலம் இருக்காது. உலகளவில் லட்சக்கணக்கான தொழில்கள், வர்த்தகம் கடைசி கட்ட சுவாசத்தில்இருக்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு சேமிப்பும் இல்லை, கடன் பெறவும் வழியும் இல்லை. இதுதான் உலகளவில் தொழிலாளர்கள், தொழில்களின் உண்மையானநிலை. நாம் இந்தநேரத்தில் உதவாவிட்டால், தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் தொழில்களும் அழிந்துவிடும்.

கரோனா வைரஸ் பாதிப்பு வருவதற்கு முன் ஒப்பிடும் போது இப்போது 10.5 சதவீதம் வேலைநேரத்தை 2-வது காலாண்டில் இழந்துள்ளளனர். இது 30.50 கோடி தொழிலாளர்களின் முழுநேர வேலைக்கு சமமாகும். இதற்கு முன் 19.50 கோடி தொழிலாளர்கள் எனக் கணக்கிட்ட நிலையில் அதிகரித்துள்ளது

2-வது காலாண்டில் அமெரிக்காவில் வேலைநேரத்தில் 12.4 சதவீதமும், ஐரோப்பா, மத்திய ஆசியாவில் 11.8 சதவீத வேலைநேரமும், மற்ற மண்டலங்களில் 9.5 சதவீத வேலைநேர இழப்பும் ஏற்படும். உலகளவில் கரோனா பாதி்ப்பால் தொழில்கள் மூடப்பட்டதன் காரணமாக தொழிலாளர்களின் தேவையும் 81 சதவீதத்திலிருந்து 68 சதவீதமாக கடந்த இரு வாரங்களில் குறைந்து விட்டது

மேலும், மொத்தவிற்பனை, சில்லரை விற்பனை, தயாரிப்பு துறை, விருந்துஉபசரிப்பு, உள்ளி்ட்ட 43.60 கோடி தொழில்கள், நிறுவனங்கள் கரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டு, மிகப்பெரிய சீர்குலைவை நோக்கி நகர்ந்துள்ளன. இந்த துறைகளையும், துறையில் உள்ள தொழிலாளர்களைக்காக்கவும், குறிப்பாக அமைப்பு சாரா தொழில்கள்,தொழிலாளர்களைக் காக்க அவசரமான, இலக்குகள் உடைய, நெகிழ்வுத்தன்மை கொண்ட ஆதரவுக் கொள்ைககள் அவசியம்

முழுமையான சமூக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த, உறுதியான வேலை ஆதரவுக் கொள்கைகள் பொருளாதார வளர்்ச்சிக்கு மிகவும் அவசியம். சர்வதேசஅளவிலான ஊக்கத்தொகுப்பு, கடன் மீட்பு நடவடிக்கைகள் போன்றவை தொழில்களை அழியாமல் பாதுகாக்கும்.
இவ்வாறு கெய் ரைடர் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x