Last Updated : 29 Apr, 2020 07:27 AM

Published : 29 Apr 2020 07:27 AM
Last Updated : 29 Apr 2020 07:27 AM

அமெரிக்காவில் 59,000-த்தைக் கடந்த கரோனா மரணங்கள்; நாம் அனைவரும் ஒர் இதயத்துடன் துயரத்தை அனுபவிக்கிறோம்- ட்ரம்ப் உருக்கம்

அமெரிக்காவைப் பிடித்து ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 59,000-த்தைக் கடந்து விட்டது. . பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தையும் கடந்து மேலே மேலே சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் புதிய கேஸ்கள், மரண விகிதங்க்ள் குறைந்து வருகின்றன.

பலி எண்ணிக்கை 59,266 ஆகவும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,35,765 ஆகவும் உள்ளது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகவும் உருக்கமாகக் கூறும்போது, “பாதிக்கப்பட்டோருக்காகவும், தங்கள் சொந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்காகவும் நாம் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறோம், இது போன்ற ஒன்றை இதுவரை பார்த்ததில்லை. நாம் அனைவரும் ஓர் இதயத்துடன் துன்பத்தை அனுபவிக்கிறோம், ஆனாலும் நாம் மீண்டு விடுவோம், நாம் வலுவாக மீண்டு வருவோம்” என்று கூறினார்.

கரோனா பாதிப்பில் 10 லட்சத்தையும் கடந்து அதற்கும் கூடுதலாகச் சென்ற முதல் நாடு அமெரிக்காதான். உலகம் முழுதும் 31 லட்சம் கரோனா பாதிப்பு என்றால் அமெரிக்காவில் மூன்றில் ஒரு பங்கு அந்தப் பாதிப்பைக் கொண்டுள்ளது.

அதே போல் கரோனா உலக பலி 2,13,000 என்றால் அமெரிக்காவில் இதில் நான்கில் ஒரு பங்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ட்ரம்ப் கூறும்போது, “பெருந்தொற்றின் மோசமான நாட்களைக் கடந்து விட்டோம் என்கின்றனர் நிபுணர்கள், அமெரிக்கர்கள் பாதுகாப்பான துரித மறு திறப்புக்காகக் காத்திருக்கின்றனர். இந்தச் சோதனைக் காலக்கட்டத்தில் லட்சக்கணக்கான கடின உழைப்பு அமெரிக்கர்கள் தியாகங்கள் பல செய்யக்கோருகிறோம். இந்தத் தியாகங்கள் சாத்தியம் என கூட யாரும் நினைக்க முடியாத தியாகங்கள் ஆகும். நாம் இப்படியெல்லாம் பேசுவோம் என்றும் கூட யாரும் நினைத்துக் கூட பார்த்ததில்லை” என்றார்.

கலிபோர்னியாவில் மெதுவாக லாக் டவுனை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. “நோய்த்தடுப்பு, அல்லது வாக்சைன் இல்லாத வரை நாம் முந்தைய நிலைக்குச் செல்ல முடியாது. பொருளாதாரத்தை மறுபடி திறப்பது என்பது தரவுகளின் அடிப்படையில் மட்டுமே தவிர கொள்கை அடிப்படையில் அல்ல.

கலிபோர்னியாவில் இதுவரை 1,800 பேர் மரணமடைந்துள்ளனர். ஜூலை-ஆகஸ்டில்தான் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என்கிறார் அம்மாகாண ஆளுநர்.

கரோனா மையமாகத் திகழும் நியூயார்க்கில் அத்தியாவசியமில்லாத தொழில்கள் தொடர்ந்து மே 15ம் தேதி வரை மூடியிருக்கவும், இதே உத்தரவு நியுஜெர்சி, கனெக்டிகட், பென்சில்வேனியா, டெலாவேர் , ரோட் தீவு, மசாசுசெட்ஸ் ஆகிய மாநிலங்களிலும் நீடிக்கிறது.

கேள்விகளுக்குப் பதில் அளித்த அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா மற்ற நாடுகளை விடவும் அதிக கரோனா மருத்துவ்அச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. மற்ற நாடுகளை அதிக டெஸ்ட்கள் செய்யப்படுவதால் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

நாங்கள் இது தொடர்பாக நிபுணர்களிடம் ஆலோசனை செய்து வருகிறோம். ஆனால் நிபுணர்கள் தவறு செய்கின்றனர், இது இவ்வளவு சீரியசாகும் என்று ஒருவருக்கும் தெரியவில்லை, தவறிழைத்து விட்டன.ர்

நான் செய்திருக்கக் கூடாது என்று நிபுணர்கள் கருதியதை நான் செய்தேன், நான் நாட்டை லாக் டவுன் செய்தேன், எல்லைகளை மூடினேன். சீனா உள்ளே வருவதை தடை செய்தேன். அமெரிக்கக் குடிமக்கள் வெளிநாடுகளிலிருந்து வரும்போது கடுமையாக சோதிக்கிறோம்.

அமெரிக்கா மீண்டும் திறக்கப்படும். வெற்றிகரமான திறப்பாக அது இருக்கும். 3வது காலாண்டு இது மாற்றத்துக்கான காலாண்டாக இருக்கும் எல்லாம் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன், அடுத்த ஆண்டு இந்த நாட்டுக்கு மிகப்பிரமாதமான ஆண்டாக இருக்கும், இவ்வாறு கூறினார் ட்ரம்ப்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x