

சீனத் தலைநகர் பெய்ஜிங் நகரி்ல் கரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்துவிட்டதால், கரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டிருந்த அனைத்து சிறப்பு மருத்துவமனைகளையும் சீன அரசு மூடுகிறது
இதுவரை சீனாவில் புதிதாக 6 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், அறிகுறியில்லாமல் 40 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மற்றவகையில் பெய்ஜிங் கரோனா நோயாளிகள் இல்லாத நகராக மாறிவிட்டது
கரோனா வைரஸின் பிறப்பிடமாக இருந்த வூஹான் நகரில் சிகிச்சைப் பெற்றுவந்த கடைசி கரோனா நோயாளியும் ஞாயிற்றுக்கிழமை மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், கரோனா நோயாளி இல்லாத நகரமாக மாறிவிட்டது. இப்போது பெய்ஜிங் நகரும் மாறியுள்ளது
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதுவரை 193 நாடுகளை ஆட்டுவித்து வரும் கரோனா வைரஸைச் சமாளிக்க முடியாமல் பல நாடுகள் திண்டாடி வருகின்றன. கரோனாவால் இன்று உலக அளவில் ஏறக்குறைய 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளைகளைச் சமாளிக்க வூஹான் நகரில் தற்காலிகமாக 16 மருத்துவமனைகளை சீன அரசு உருவாக்கியது. கரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்ததால் அந்த மருத்துவமனைகள் கிருமிநாசினி தெளித்து மூடப்பட்டன.
தலைநகர் பெய்ஜிங்கில் ஜியோடாங்ஷான் மருத்துவமனை கடந்த 2003-ம் ஆண்டு சார்ஸ் பாதிப்பின் போது சிகிச்சையளிக்க உருவாக்கப்பட்டது. அங்கு கரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்துவிட்டதால் அந்த மருத்துமனையும் மூடப்பட்டது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் மக்களை பரிசோதிக்கவும், சிகிச்சையளிக்கவும் கடந்த மார்ச் 16-ம் தேதி பெய்ஜிங் நகரின் புறநகரில் ஒரு தற்காலி மருத்துவமனை அமைக்கப்பட்டிருந்தது அதும் மூடப்பட்டது
பெய்ஜங் நகரில் 593 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர், 9 பேர் உயிரிழந்தநனர்.இதில் 536 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டனர்.
சீனாவின் தேசிய சுகாதார மையம்(என்ஹெச்சி) இன்று ெவளியிட்ட தகவலில் “ சீனாவில் புதிதாக 6 ேபர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 3 பேர்வெளிநாடுகளி்ல் இருந்து வந்தவர்கள். மற்ற 3 பேர் உள்நாட்டவர்கள். கரோனாவுக்குக் காரணமான சீனாவில் இதுவரை 82,836 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,633 பேர் உயிரிழந்துள்ளனர். 77,555 பேர் குணமடைந்துள்ளனர்.
இதில் 648 பேர் இன்னும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,639 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்து கரோனாவில் பாதிக்கப்பட்டனர், 552 பேர் குணடைந்துள்ளனர்,21 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 40 பேர் அறிகுறியில்லாமல் கரோனாவால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 130 பேர் உள்பட 997 பேர் அறிகுறியின்றி கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர. இதில் 599 பேர் கண்காணிப்பில் உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது